பெண்களுக்கு மல்லிகை பூக்களை எவ்வளவு பிடிக்குமோ, அதற்கு பலமடங்குக்கும் மேலாக பட்டுச் சேலைகளையும், தங்கத்தையும் பிடிக்கும். அவை அழகு, கெளரவம், அந்தஸ்து சார்ந்தது.
திருமணம் என்றாலே முதலில் மனதில் முதலில் எழுவது பட்டுச் சேலைகளும், தங்க நகைகளும்தான்! வீட்டில் விசேஷம், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும்போது, பெண்கள் பட்டுச் சேலைகளைக் கட்டி, நகைகளை அணிந்து முகத்தில் பூரிப்பூடன் பெண்கள் வலம் வருவது வாடிக்கை. இவ்விரண்டின் சிறப்புகளை அறிவோம்.
தங்கத்தின் விலை குறைவாக உள்ள நாடுகள்:
அண்மைக்காலமாகத் தினமும் விலை உயர்வது தங்கத்தின் விலை. 'எப்படி தங்கம் வாங்கி, எப்படி மகள் திருமணத்தை நடத்தப் போறோம்?' என நடுத்தர வர்க்கத்தினர் கவலைப்படுகின்றனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, துபை, துருக்கி, ஹாங்காங், மாலாவி, கொலம்பியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 24 கேரட் தங்கமும், 22 கேரட் தங்கமும் இந்தியாவை ஒப்பிடும்போது விலை மலிவாக இருக்கிறது. இதற்கு இறக்குமதி வரி குறைவு, பொது வரி குறைவு, வாங்கும் நுகர்வு குறைவு ஆகிய மூன்று காரணங்கள்தான்.
இந்த நாடுகளில் பவுனுக்கு 10 ஆயிரம் ரூபாய் (இந்திய மதிப்பில்) வரை விலை குறைவாகும்.
ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு மொத்த தங்கச் சேமிப்பைவிட அமெரிக்காவின் தங்கச் சேமிப்பு கிடங்குகளில் அதிகம்.
உள்ளுர் விமானங்களில், அறிவிப்பில்லாமல் 500 கிராம் தங்கம் வரை எடுத்துச் செல்ல முடியும். 10 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்ட தங்கத்தை எந்த வரி விதிப்பும் இல்லாமல் எடுத்துச் செல்ல முடியும்.
உலகிலேயே சுவிட்சர்லாந்தில்தான் 999.9 சுத்தமான தங்கம் வாங்க இயலும். இங்கு தங்கச் சுத்திகரிப்பு நிலையங்கள்,ஆடம்பரச் கடிகாரம், நகை தயாரிப்புகள் மிக அதிகம்.
கர்நாடகத்தில்தான் பட்டுச் சேலை:
பட்டுச் சேலைகளை மிகுந்த அளவில் உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கும் மாநிலம் கர்நாடகம்தான். மைசூரு மன்னர் ஸ்ரீநல்வாடி கிருணராஜ உடையாரே பட்டு கலைஞர்களை ஆதரிக்கும் விதமாக, நெசவுகளை அமைத்துச் செயல்பட அனுமதித்தார். அவர்கள் தயாரித்ததே மைசூரு சில்க். நேர்த்தி, பளபளப்பு, சிறந்த வடிவமைப்புகளுக்குப் பெயர் பெற்றவை.
மைசூரு, பெங்களுரு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் பட்டுச் சேலைகள் தயாரிப்பு மிகப் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இவைதவிர, கர்நாடகத்தின் பிற நகரங்களிலும் பட்டுச் சேலைகள் தயாரிக்கப்படுகின்றன.
கர்நாடகாத்தில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் மல்பெரி பட்டு உற்பத்தியாகிறது. இது நாட்டின் மொத்த மல்பேரி பட்டு உற்பத்தியில் 45 சதவீதமாகும்.
பட்டு வளர்ப்பவர்கள், பட்டுப் புழுக்கள் உண்பதற்காக மல்பேரி இலைகளைப் பயன்படுத்துவதால் 'மல்பேரி பட்டு' என பெயர் வந்தது. இதற்கு கர்நாடக பட்டுத் தொழில்கள் கழக லிமிடெட் காப்புரிமை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

