எந்த அளவுக்கு பெண்களின் உதடுகள் அடர்த்தியாகவும் மென்மையாகவும் இருக்கின்றதோ அந்த அளவுக்கு உதடுகள் மிகுந்த கவர்ச்சிகரமாகத் தோற்றம் அளிக்கும். இரவில் படுக்கச் செல்லும் முன் நல்ல வெண்ணையை உதடுகளில் பூசி வந்தால் உதடுகள் அடர்த்தியாகவும் மென்மையாகவும் மாறி அழகு சேர்க்கும்.
இளம்பெண்கள் மிகவும் அழுத்தமான சிவப்பு வண்ணம் உள்ள உதட்டு சாயத்தை அணிவது சரியல்ல. அழுத்தமான உதட்டுச் சாயம் முதுமை தோற்றத்தை உண்டாக்கும்.
நடுத்தர வயது பெண்கள் வேண்டுமானால், அழுத்தமான வண்ணத்தில் உதட்டுச் சாயம் பூசலாம். இளம்பெண்கள் லேசான வண்ணத்தில் உதட்டுச் சாயம் பூசுவது இளமை கொழிக்கும். எழில் ஊட்டும் மாநிறமாக உள்ள பெண்கள் ஓரளவு ஆரஞ்சு வர்ணத் தோற்றம் உடைய உதட்டுச் சாயத்தை பூசினால் எடுப்பாக இருக்கும். நல்ல சிவந்த மேனியர் ரோஜா பூ வண்ணத்தைப் பயன்படுத்தலாம்.
சற்று கரு நிறமாக உள்ள பெண்களுக்கு மிகவும் லேசான சிவப்பு நிறம் உள்ள உதட்டு சாயம் அழகாக இருக்கும்.
உதட்டு தோல் உரிந்தால் பல்லால் கடித்தோ வேறு விதமாகவும் அகற்ற முயற்சி செய்யக் கூடாது அதனால் நாளடைவில் உதடுகளின் அழகைக் கெடுத்து விடக் கூடும் உதடுகளின் மென்மை கெட்டு சொரசொரப்பான நிலையை உதடுகள் அடைந்துவிடக் கூடும் .
உதட்டு தோல் உரிந்தால் அதை அப்படியே விட்டுவிட்டால் தானாக கீழே விழுந்து விடும்.
உதட்டு சாயம் பூசும் போது சில பெண்களின் உதடுகளில் அது சரியாகப்படாமல் திட்டு திட்டாக இருக்கும். அப்படியே அதை விட்டுவிட்டால் அவலட்சணமாகத் தோன்றும். உதட்டுச் சாயம் பூசுவதற்கு முன்பு உதடுகளில் சிறிதளவு கிளிசரின் தடவி அதன் பிறகு உதட்டுச்சாயம் பூசலாம் அல்லது உதடுகளின் சிறிதளவு முகப்பவுடரை ஒத்தி விட்டு பிறகு உதட்டுச் சாயம் பூசினாலும் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.
உதடுகளின் இயற்கை வண்ணம் போன்று தோற்றம் அளிக்கும் விதத்தில் மிக, மிக லேசாக உதட்டு சாயம் பூசினால்தான் நம் நாட்டு பெண்களுக்கு எடுப்பாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் கட்சியின் ஆட்சியே அமையும்: கே.பி.ராமலிங்கம்

உத்திரமேரூா் பாலசுப்பிரமணியன் கோயில்

அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!

பெரிய்...ய பூங்கா...
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

