/

சாதனைப் பெண்கள்...

வணிகக் கப்பலுக்கான முதல் இந்திய பெண் எலக்ட்ரோ டெக்னிக்கல் அலுவலராக (இ.டி.ஓ.) வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் இருபத்து ஒன்பது வயதான ரொமிதா பண்டேலா.

News image
ரொமிதா பண்டேலா | நிதின்கரீர்
Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:26 am

கோட்டாறு கோலப்பன்

வணிகக் கப்பலுக்கான முதல் இந்திய பெண் எலக்ட்ரோ டெக்னிக்கல் அலுவலராக (இ.டி.ஓ.) வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் இருபத்து ஒன்பது வயதான ரொமிதா பண்டேலா. கடலில் மாதக் கணக்கில் தங்கிப் பணிபுரியும் கடினமான இந்தப் பணியை இவர் மேற்கொண்டுவருகிறார்.

மகாராஷ்டி மாநிலத்துக்கு உள்பட்ட ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள புசாவாலைச் சேர்ந்த இவர், சிறுவயது முதலே கடல் மீது தணியாக ஆசை கொண்டிருந்தார்.

மின்னியல் பொறியியலில் பட்டம் பெற்றதும், "ஷிப்பிங் கார்பரேஷன் ஆஃப் இந்தியா'வில் பணிக்கு விண்ணப்பித்து, பணி பெற்றார். இருப்பினும், அவர் அணியில் இருந்தவர்களை நீக்கம் செய்துவிட்டனர்.

பின்னர், பிரபல வணிகக் கப்பலில் பணி வாய்ப்புப் பெற்றபோது முதல் பெண்ணாகவும் திகழ்ந்தார்.

தற்போது இங்கிலாந்து சொகுசு கப்பலில் வேலை பெற்றிருக்கும் ரொமிதா, உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.

------------------------------------------------------------------------------------------------

தமிழகக் கிராமமான குறும்பட்டியைச் சேர்ந்த வளர்மதி, தற்போது கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பாலக்காடு வென்மறையில் குடும்பத்தோடு வசித்துவருகிறார்.

சிறுவயதிலேயே சைக்கிள் ஓட்டுவதை விரும்பிய இவர், பள்ளிப் பருவத்தில் தினமும் 15 கி.மீ. சைக்கிள் ஓட்டியே பள்ளிக்கு வருவார். தற்போது அவருக்கு வயது 55. இருந்தாலும் அவர் தற்போதும் சைக்கிள் ஓட்டுகிறார்.

தாயின் ஆர்வத்தைக் கண்ட இவருடைய மகன்கள் நவீன சைக்கிளைப் பரிசாக அளித்து உற்சாகப்படுத்திவருகின்றனர்.

------------------------------------------------------------------------------------------------

மகாராஷ்டிர மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருந்த நிதின்கரீர் அண்மையில் ஓய்வு பெற்றதையடுத்து, அங்கு புதிய தலைமைச் செயலாளராக சுஜாதா சவுனிக் பொறுப்பேற்றுள்ளார். இவர்தான் மாநிலத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளர் என்கிற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

------------------------------------------------------------------------------------------------

கனடா ராணுவத் தளபதியாக இருந்துவரும் வெய்ன் அயர் ஓய்வு பெற உள்ளதையடுத்து, புதிய தளபதியாக ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் முதல் பெண் ராணுவத் தளபதியாகும் பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.