லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாகற்காயின் மருத்துவப் பயன்கள்

பாகற்காயை நாள்தோறும் அவசியம் சேர்க்க வேண்டும். உணவில் அவசியம் கசப்புச் சுவை தேவை.

News image

பாகற்காய்

Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:30 am

பாகற்காயை நாள்தோறும் அவசியம் சேர்க்க வேண்டும். உணவில் அவசியம் கசப்புச் சுவை தேவை. கசப்புச் சுவை இல்லாத காரணத்தால், மனிதனுக்கு பல வியாதிகள் வருகின்றன. அறுசுவை உணவுகளும் நமது உணவில் சம அளவில் நாள்தோறும் இருந்தால் நோயற்ற வாழ்வு நிச்சயமாக வாழலாம் .

வாரத்துக்கு நான்கு நாள்களாவது பாகற்காயை உணவில் சேர்க்க வேண்டும் .

பாகற்காயை பொடி செய்து நாள்தோறும் காலையில் ஒரு சிறிய தேக்கரண்டி சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சிறு குழந்தைகள் கீரிபூச்சியால் வேதனைப்படும்போது, பாகற்காயின் சாற்றை லேசாக ஆசனவாயில் தடவினால் போதும். பூச்சியால் ஏற்படும் தொல்லை குழந்தைகளின் வேதனையை அகன்று விடும்.

பெண்களின் கர்ப்பப் பையில் கெட்ட பூச்சிகள் இருந்து கரு உற்பத்தி செய்யாமல் தடை செய்வதைத் தடுக்க, பாகற்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அம்மியில் வைத்து சிறிது நீர் விட்டு குழம்பு பதத்துக்கு அரைத்து சுத்தமான துணியில் வடிகட்டி தினசரி காலை வெறும் வயிற்றில் குடித்தால் பிரச்னை தீரும்.

வைட்டமின் சி அதிகம் உள்ளது பாகற்காய். இது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை நல்ல முறையில் ஊக்கப்படுத்துகிறது.

பாகல் இலையை எடுத்து கசக்கிப் பிழிந்து, சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து அத்துடன் சிறிது வறுத்து பொடி செய்யப்பட்ட சீரகத் தூளை கலந்து காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட்டால் விஷ ஜூரம் நின்றுவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.