குலோப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி மாவை பிசைந்து உருட்டி வைக்கும்போது ஒரு குச்சியால் நடுவில் ஒரு துளை போட்டால் மாவு உள்ளே நன்றாக வெந்து விடும் ஜாமூன் கருகவும் செய்யாது.
இரண்டு பங்கு பாசிப்பருப்பு, ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் சுவை சூப்பரோ சூப்பர்.
பர்பி மைசூர் பாகு போன்ற ஸ்வீட்டுகள் செய்யும்பொழுது அவற்றின் úஜ்மலே அலங்காரமாக வைக்கிற பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவை சரியாக ஒட்டிக்கொள்ளாமல் கீழே விழுந்து விடுகிறதா நெய் தடவிய தட்டில் இவற்றை தூவி பிறகு ஸ்வீட் கலவையை இவற்றின் மேலே கொட்டி ஆறவிட்டு துண்டுகள் போட்டால் இவை நன்றாக ஒட்டிக் கொள்ளும் பிறகு ஸ்வீட் துண்டுகளை எடுத்து கீழ்பாகம் மேலே வரும்படி திருப்பி அடுக்கி வைக்கலாம்.
வெண்முறுக்கு அல்லது தேன்குழல் செய்யும்போது ஒரு டம்ளர் அரிசி மாவு, அரை டம்ளர் பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றுடன் தேவையான அளவு புளித்த மோர் உப்பு காரம் சேர்த்து பிசைந்து பிழிந்தால் லேசான புளிப்புச் சுவையுடன் கரகரப்பான முறுக்கு அருமையாக இருக்கும்.
பயத்தமாவில் லட்டு செய்யும் போது குலோப்ஜாமூன் மிக்ஸ் நெய் சேர்த்துக் கொண்டால் ருசியும் மணமும் சூப்பர்.
ரவா உருண்டை செய்யும் பொழுது சிறிதளவு பால் பவுடர் சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
பாதுஷா செய்யப் போகிறீர்களா? சர்க்கரையை இரட்டைக் கம்பு பாகு வரும் வரை காய்ச்சியதும் அரை மூடி எலுமிச்சம்பழத்தை பிழிந்து கொள்ளுங்கள் இதனால் பாகு திரவ நிலையில் இருக்கும் பொறித்த எல்லா பாதுஷாக்களையும் சுலபமாக பாகில் ஊற வைக்கலாம்.
பாதுஷா செய்த பின்பு அதன் மீது பூஸ்ட் அல்லது போன் விட்டாவை திக்காக கரைத்து ஆங்காங்கே தெளித்தால் வித்தியாசமான டிசைனில் பாதுஷா ரெடி.
வெல்லப்பாகு செய்னி பாகு காய்ச்சும் போது பாகுபதம் வந்தவுடன் எலுமிச்சை பழச்சாறு சில துளிகள் விட்டால் பாகு முற்றாது .
தீபாவளிக்கு முடிந்தவரை சர்க்கரையை தவிர்த்து வெல்லம் அல்லது பனைவெல்லத்தில் இனிப்புகள் செய்தால் இரும்பு சத்துடன் கூடிய பலகாரம் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


