/

ஆடம்பரக் கார்!

விளம்பரங்களில், ஹிந்திப் படங்களில் நடித்து வரும் கிருத்தி ஸனோன் பிரபல முன்னணி  நடிகர்களுக்கு    இணையாக விலை உயர்ந்த  கார் ஒன்றை வாங்கியுள்ளது பலரது  புருவங்களை உயர்த்தச் செய்திருக்கிறது. 

News image
Updated On :22 செப்டம்பர் 2021, 12:30 am

விளம்பரங்களில், ஹிந்திப் படங்களில் நடித்து வரும் கிருத்தி ஸனோன் பிரபல முன்னணி நடிகர்களுக்கு இணையாக விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளது பலரது புருவங்களை உயர்த்தச் செய்திருக்கிறது.

மெர்ஸிடஸ் மேபக் ஜி.எல்.எஸ் 600 காரை இரண்டரை கோடி விலை கொடுத்து கிருத்தி ஸனோன் வாங்கியுள்ளார். ஏற்கெனவே கிருத்தியிடம் பல கார்கள் உள்ளன.

கிருத்தி டிராபிக் போலீசாக, விமானப் பணிப் பெண்ணாக வரும் சோப்பு விளம்பரம் அகில இந்திய அளவில் கவனங்களை ஈர்த்தது.

கீர்த்தி ஸனோன் நடித்து வெளியாகி இருக்கும் "மிமி' (ஙண்ம்ண்) திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி , ரசிகர்களின் பலமான வரவேற்பைப் பெற்றுள்ளது. கரோனா காலத்தில் திரையரங்குகள் மூடிக் கிடைக்கும் சூழலில், தனது படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தனக்குத் தானே கீர்த்தி ஸனோன், புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 காரை வாங்கி பரிசு அளித்துக் கொண்டார் என்று கிண்டலாக பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 காருக்கு மவுசு அதிகம். இந்த ஆண்டு இந்தியாவிற்கு மொத்தம் ஐம்பது மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 கார்கள் மட்டும் ஒதுக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. வந்த சில வாரங்களில் எல்லா கார்களும் விற்றுத் தீர்ந்தன. இனி அடுத்த ஆண்டுதான் இந்தியாவிற்கு இந்த ரக கார்கள் இறக்குமதி ஆகுமாம்.

இந்த ரகக் காரை அகில இந்திய அளவில் ஐந்து நடிகர்கள் மட்டுமே வாங்கியுள்ளனர். தெலுங்கு நடிகர் ராம் சரண் தவிர மற்ற நான்கு பேரும் ஹிந்தி நடிகர்கள். அர்ஜுன் கபூர், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குரானா என்ற பட்டியலில் கடைசியாக இணைந்திருக்கிறார் கிருத்தி ஸனோன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.