தேவையானவை :
உருளைக்கிழங்கு - கால் கிலோ
கடலை மாவு -1 கிண்ணம்
பெரிய வெங்காயம் -2
குடைமிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 1
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து, நீளமாக நறுக்கி, உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மிளகாய்த் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுது போன்று கலந்து கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும், உருளைக்கிழங்கை தண்ணீரில் இருந்து எடுத்து, ஒவ்வொன்றாக கடலை மாவு விழுதில் புரட்டி, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது, குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், உப்பு சேர்த்து கிளற வேண்டும். அடுத்து தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு புரட்டி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு சில்லி ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி! - டி.கே.எஸ். இளங்கோவன்
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்

நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்

சிறுபான்மையினா் வாக்குகளை பிரிக்கவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளாா்! - திருமாவளவன் பேச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


