மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஆளுமைப்  பண்புகளை பரதநாட்டியம்  கற்றுக்  கொடுத்தது!

ஸ்வாதி விஸ்வாஸ், பரத நாட்டியத்தில் முன்னணிக் கலைஞர். நான்கு வயதிலேயே நடனம் கற்கத் தொடங்கியவர். முதலில் கற்ற நடனம் "கதக்'. அரங்கேற்றமும் நடந்தது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:08 pm

பனுஜா

ஸ்வாதி விஸ்வாஸ், பரத நாட்டியத்தில் முன்னணிக் கலைஞர். நான்கு வயதிலேயே நடனம் கற்கத் தொடங்கியவர். முதலில் கற்ற நடனம் "கதக்'. அரங்கேற்றமும் நடந்தது. "கதக்' பயின்றவருக்கு பரதநாட்டியம் மீது ஆர்வம் பிறந்தது. பத்தாம் வயதில் பரதமும் பயிலத் தொடங்கினார். பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது அரங்கேற்றம் நடந்தது. இவர் பரதம் கற்றுக் கொண்டாலும், கல்விக்கு பரத நாட்டியம் இடையூறாக அமையவில்லை.

""நான் தான் வகுப்பில் முதலாவதாக வருவேன். பள்ளிப் படிப்பு முடிந்ததும் டில்லி ஸ்ரீராம் கல்லூரியில் சேர்ந்தேன். 2000-இ ல் சார்ட்டட் அக்கெளன்டன்ட் ஆனேன். பல தனியார் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை ஏற்றாலும் பரத நாட்டியத்தை விட்டுவிடவில்லை. உலக நாடுகளில் பரநாட்டியத்தை மேடையேற்றியிருக்கிறேன்.

"சிறப்பு' குழந்தைகளுக்காகவும் நான் மேடை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறேன். பரத நாட்டியம்... அலுவலகம் இரண்டையும் என்னால் சமமாகக் கையாள முடிந்தது.

அலுவலகங்களில் சிறப்பாக பணிபுரிய பரத நாட்டியத்திற்காக காலம் தவறாமல் நான் செய்யும் பயிற்சி, நிகழ்ச்சியை எப்போது ஆரம்பித்து எப்போது நிறைவு செய்ய வேண்டும் என்று நேரத்தை சரியாகக் கையாளுவது, கவனம் சிதறாமை, பார்வையாளர்கள் எப்படி ரசிக்கிறார்கள்... அவர்களுக்கு நடனத்தில் எந்த அயிட்டம் பிடிக்கிறது.. போன்றவற்றைக் கணித்து அவர்களின் ரசனைக்கேற்றவாறு நிகழ்ச்சியை வழங்குவது போன்ற பண்புகளை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. அந்தப் பண்புகள் அலுவலக நிர்வாகத்தில், நிதிநிலைமை குறித்த முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்பதில் எனக்கு உதவுகின்றன.

அதனால்தான் "ஆளுமைப் பண்புகளை பரதநாட்டியம் எனக்கு கற்றுக் கொடுத்திருப்பதினால் நான் பரத நாட்டியத்திற்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்'' என்கிறார் ஸ்வாதி விஸ்வாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.