சமையல் சமையல்
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். பின்னர், அகலமான பாத்திரத்தில் மேலேயுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக கிளறவும்.


தேவையானவை:
பொரி - 50 கிராம்
வெங்காயம் - 1
கேரட்- 1
வறுத்த வேர்க்கடலை - 1 கைப்பிடியளவு (பாதியாக உடைத்தது)
பச்சை மிளகாய் - 1(பொடியாக நறுக்கவும்)
ஓமப்பொடி அல்லது மிக்ஸர் - 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
தக்காளி - பாதியளவு (பொடியாக நறுக்கியது)

செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். பின்னர், அகலமான பாத்திரத்தில் மேலேயுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக கிளறவும். (சின்ன குழந்தைகளுக்கு பச்சை மிளகாய் தவிர்த்துவிட்டு, சிறிது சாட் மசாலா தூள் சேர்த்துக் கொள்ளலாம்.) சுவையான மசாலாபொரி தயார்.
தேவையானவை:
குட்டி பூரிகள் (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - 10,
காய்ந்த பட்டாணி -– ஒரு கிண்ணம்,
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
சீரகம் - சிறிதளவு,
பச்சை மிளகாய் -–4
கெட்டித் தயிர் - அரை கிண்ணம்
ஸ்வீட் சட்னி -– ஒரு தேக்கரண்டி,
சாட் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
ஓமப்பொடி - கால் கிண்ணம்
கொத்துமல்லி -–சிறிதளவு
எண்ணெய் -– ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பச்சை மிளகாயை இரண்டாக கீறிப் போட்டு வதக்கி, வெந்தப் பட்டாணியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பட்டாணி கலவையை எடுத்துக் கொண்டு அத்துடன் பூரி துண்டுகளை பொடித்துச்சேர்க்கவும். பின்னர், கெட்டித் தயிர், ஸ்வீட் சட்னி, சாட் மசாலாப் பொடி, ஓமப்பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை:
குட்டி பூரிகள் - 10 (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்)
தயிர் - ஒரு கிண்ணம்
உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி - தேவைக்கேற்ப
உருளைக்கிழங்கு -– 2
காய்ந்த பட்டாணி - கால் கிண்ணம்
ஸ்வீட் சட்னி - 1 தேக்கரண்டி
ஓமப்பொடி - தேவையான அளவு.
செய்முறை:

பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைக்கவும். குட்டி பூரிகளை வரிசையாக தட்டில் அடுக்கவும். தயிருடன் உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி சேர்த்துக் கலக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்க்கவும். பூரியின் மேல் பகுதியில் ஓட்டைப் போட்டு தயிர் கலவை, சிறிதளவு உருளைக்கிழங்கு, பட்டாணி, ஸ்வீட் சட்னி விட்டு பூரியை நிரப்பி, மேலே ஓமப்பொடியைத் தூவி பரிமாறவும்.
தேவையானவை:
பப்படம் - ஒரு கட்டு
உருளைக்கிழங்கு - 4
கெட்டித் தயிர் - ஒரு கிண்ணம்
சாட் மசாலாப் பொடி - ஒரு தேக்கரண்டி
ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி - தலா ஒரு தேக்கரண்டி
கேரட் துருவல், கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:

பப்படங்களை எண்ணெய்யில் பொரிக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து துண்டுகளாக்கவும். தயிரை கெட்டியாக கடையவும். பப்படங்களை நொறுக்கி ஒரு தட்டில் பரப்பவும். அதன் மீது உருளை துண்டுகள், கடைந்த தயிர், சாட் மசாலா பொடி, ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி, கேரட் துருவல், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குறிப்பு: எந்த வகையான சாட் மசாலா செய்வதாக இருந்தாலும், அதற்கு ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னி தேவை. எனவே, ஸ்வீட் சட்னி, கீரின் சட்னி செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையானவை:
பேரீச்சம்பழம் - 10,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் -– 4,
சீரகம் - ஒரு தேக்கரண்டி,
வெல்லம் - சிறிதளவு,
உலர் திராட்சை - 10,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு, புளி, காய்ந்த மிளகாய், சீரகம், வெல்லம், உலர் திராட்சை, உப்பு சேர்த்து தளர அரைத்து, வடிகட்டி, கொதிக்கவிட்டு, கெட்டியான பின்பு இறக்கவும். பரிமாறும்போது நீர்க்க கரைத்து பயன்படுத்தலாம்.
கிரீன் சட்னி தேவையானவை:
கொத்தமல்லி - ஒரு கிண்ணம்,
பச்சை மிளகாய் -3,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு
எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் கொத்தமல்லியை வதக்கி சட்னி செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...