அண்மையில் துபாயில் திடீரென்று மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சிலை அமைக்க ஸ்விட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
லண்டனில் உலகத்தின் பிரபலங்களின் ஆளுயர மெழுகு சிலைகள் நிறுவப்பட்டு வரும் 'மேடம் துசாட்ஸ்' மெழுகு அருங்காட்சியத்தில் 2012 - வாக்கில் நடிகை ஸ்ரீதேவியின் உருவச்சிலையை நிறுவ பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் ஸ்ரீதேவியின் மெழுகு உருவச்சிலை 'மேடம் துசாட்ஸ்' மெழுகு அருங்காட்சியில் நிறுவப்படவில்லை.
இந்த அருங்காட்சியகத்தில் இந்தியப் பிரதமர் மோடி, அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், சச்சின் டெண்டுல்கர், மாதுரி தீட்சித், கரீனா கபூர் உட்பட இந்திய பிரபலங்களின் பதின்மூன்று சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த மறைந்த பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான யாஷ் சோப்ரா தனது பல படங்களின் படப்பிடிப்பை ஸ்விட்சர்லாந்தில் நடத்தினார். இதன் காரணமாக ஸ்விட்சர்லாந்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. இதனால், ஸ்விட்சர்லாந்தின் சுற்றுலா வருவாயைப் பெருக்கிய யாஷ் சோப்ராவை கெளரவிக்கும் வகையில் 2016-ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து அரசு சார்பில் இன்டர்லேகன் நகரில் அவரது சிலை திறக்கப்பட்டது. இது தவிர அந்த நகரில் ஓடும் ரயில் ஒன்றுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது.
ஆனால், யாஷ் சோப்ராவின் முன்னோடியாக, ஸ்விட்சர்லாந்தின் சுற்றுலாவை இந்தியாவில் பிரபலப்படுத்தியது மறைந்த நடிகை ஸ்ரீதேவிதான். ஸ்ரீதேவி நடித்த 'சாந்தினி' படத்தின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் ஸ்விட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையிலும், அதன் பள்ளத்தாக்குகளிலும்தான் படம்பிடிக்கப்பட்டன. அதனால், 'சாந்தினி' படத்தில் ஸ்ரீதேவி நடித்த இடங்களை தேடிப் போய்ப் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் இன்றைக்கும் இருக்கிறது.
அது போன்று மறைந்த இந்திய நடிகர் ராஜ்கபூர்தான் ஸ்விட்சர்லாந்தின் இயற்கை அழகை வண்ணத்தில் இந்தியர்களுக்கு முதன் முதலில் வெள்ளித்திரை மூலம் அறிமுகப்படுத்தினார். பின்பு 1964-இல் வைஜெயந்திமாலா நடித்த 'சங்கம்', 1967-இல் ஷர்மிளா தாகூர் நடித்த 'ஆன் ஈவினிங் இன் பாரிஸ்' படங்களை ஸ்விட்சர்லாந்தில் படம் பிடித்தார். இந்தப் படங்கள் மூலம்தான் இந்தியர்களுக்கு 'ஸ்விட்சர்லாந்து என்ற சொர்க்கம் உலகில் உள்ளது' என்று தெரிய வந்தது. தொடர்ந்து ஹிந்திப் படங்களின் படப்பிடிப்புகள் ஸ்விட்சர்லாந்தில் நடந்தன.
சிவாஜி - காஞ்சனா ஜோடியில் இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய 'சிவந்த மண்' படப்பிடிப்பின் சில பகுதிகள் ஸ்விட்சர்லாந்தில் எடுக்கப்பட்டன.
ஆக, ஸ்ரீதேவி ஸ்விட்சர்லாந்தின் சுற்றுலாவுக்கான அழகான விளம்பர தூதராக மாறியிருந்தார். அதன் அடிப்படையில் இப்போது பெர்ன் நகரில் ஸ்ரீதேவியின் சிலை அமையப் போகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம்: தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல்!

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்

வாக்களித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்! வீட்டுச் சுவரில் துரோகி வாசகம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


