டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சமையலில் சிறந்த ஜோடிகள்

மிகவும் ருசியான உணவுகள் செய்முறை விளக்கம்

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:32 pm

தவநிதி

இட்லி - வடைகறி

Story image

தேவையானவை:

பச்சரிசி - 1/4 கிண்ணம்

புழுங்கலரிசி- 1/4 கிண்ணம்

உளுத்தம் பருப்பு -1 கிண்ணம்

தயிர் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:   அரிசி,  பருப்பைக் களைந்து தனித் தனியே ஊற வைக்கவும். மிக்ஸியிலோ,    கிரைண்டரிலோ அரிசியை   ரவைபோலவும், பருப்பைக் கெட்டியாகவும்  அதிகம் தண்ணீர் விடாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன்  தயிரும், உப்பும் சேர்த்து மாவை நன்றாக கரைத்து 7-   8மணி நேரம்  ஊற விடவும். பின்னர்,எண்ணெய் தடவிய இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தை குறைந்தது 20 நிமிடம் அடுப்பில் வைத்து இட்லியைச்

சுட்டெடுக்கவும்.

வடைகறி

Story image

தேவையானவை:

கடலைப்பருப்பு - 1 கிண்ணம்

சோம்பு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 1 

தக்காளி - 2

இஞ்சி- பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கொத்துமல்லி - சிறிது

எண்ணெய் - குழிக்கரண்டி

பட்டை, கிராம்பு - 2

பிரியாணி இலை - 1

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை: கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, வடைக்கு அரைப்பது போன்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் பச்சைமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, அதனை  இட்லி தட்டில் வைத்து இட்லி போன்று அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், பின் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும் அத்துடன் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பின்னர், அதில் அவித்து வைத்துள்ள கடலை பருப்பை உதிர்த்து சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, கொத்துமல்லியைத் தூவினால், சுவையான வடைகறி ரெடி.

•••

பரோட்டா- குருமா

Story image

தேவையானவை:

மைதா - அரை கிலோ

பேக்கிங் பெüடர் - 1/4 தேக்கரண்டி

சர்க்கரை - 1 தேக்கரண்டி

சமையல் சோடா - 3 சிட்டிகை

பொடி உப்பு - 11/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: மைதா மாவோடு, பேக்கிங் பெüடர், உப்பு, சோடா இவற்றைச் சேர்க்கவும். அத்துடன்  2 தேக்கரண்டி எண்ணெய், சர்க்கரை, இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர், சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு, மிருதுவாக பூரிமாவு  போன்று பிசைந்து கொள்ளவும். மீண்டும் ஒரு எண்ணெய் தடவிய பெரிய கல்லின் மேல் மாவை பல நிமிடங்கள் அடித்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை ஒரு கிண்ணத்தில் போட்டு மாவின் மேல் பக்கம் எண்ணெய் விட்டு 2-3 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.

பின்னர், மீண்டும் ஒருமுறை மாவை நன்றாக அடித்து பிசைய வேண்டும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு எண்ணெய் தடவிய கல்லின் மேல் ஓர் உருண்டையை வைத்து கையினால் அதை நீளமாக இழுத்து பின்னர் மெல்லிய வட்டமாக சுருட்டிவிட்டு பூரி கட்டையால் லேசாக தேய்க்கவும். எல்லா உருண்டைகளையும் இவ்வாறே செய்து சாப்பாத்தி போன்று சுட்டெடுக்கவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு துணியால் பக்கங்களை அழுத்தி, பின், தளர்த்தி சூடாகப் பரிமாறவும்.

குருமா

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கு ஏற்ப

கேரட் - 100 கிராம்

பீன்ஸ் - 100 கிராம்

உருளை - 1

தாளிக்க:

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

பட்டை, கிராம்பு, லவங்கம் - தலா 1

கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவைக்கு

அரைக்க:

தேங்காய் - அரை மூடி

பெருஞ்சீரகம் } 1 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறிது

செய்முறை: அரைக்க கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, மற்ற காய்களைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றைப் போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை அதில் சேர்த்து கிளறவும். பச்சை வாசனை போனதும் காய்களைச் சேர்க்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக மூடி வேக வைக்கவும். குருமா சுண்டி வரும் போது கொத்துமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு: தேங்காய் விரும்பாதவர்கள் அதற்கு பதில் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

••

நாண் - பனீர் பட்டர் மசாலா

Story image

நாண் செய்ய தேவையானவை:

மைதா மாவு - 2 கிண்ணம்

பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி

ஆப்ப சோடா - கால் தேக்கரண்டி

பால் - அரை டம்ளருக்கும் சற்று குறைவு

தயிர் - அரை டம்ளர்

உப்பு - தேவைக்கேற்ப

சர்க்கரை - அரை தேக்கரண்டி

செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா மாவை (இட்லி சோடா) நன்றாக கலந்து வைக்கவும். இதில் சர்க்கரை மற்றும் உப்பையும் கலந்து விடவும்.

இதில் வெது வெதுப்பான பால் மற்றும் தயிரை ஊற்றி கைகளால் லேசாக கலந்து விடவும்.

மாவை அழுத்தி பிசைய தேவை இல்லை. சற்று ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும். கை விரல்களால் அப்படியே கலந்து திரட்டி உருட்டி வைத்தால் போதும். இதை மூடி போட்டு 1 மணி நேரம் வைக்கவும். பின் மாவை உருண்டைகளாக பிரித்து வைக்கவும். அவற்றை சப்பாத்தி இடுவது போல் மைதா தூவி தேய்க்கவும். பின்னர், நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, தேய்த்து வைத்த நாணை வைத்து மேலே நீர் தெளித்து நீர் உள்ள பக்கம் தவாவில் படுவது போல் ஒட்டி விடவும். இதை மூடி 1 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். நன்றாக ஆங்காங்கே உப்பி வரும். பின்னர், நாணை எடுத்து மேல் பக்கத்தை நேரடியாக தீயில் திருப்பி போடவும்.  இப்போது சுவையான சாஃப்ட்டான நாண் தயார்.

( குறிப்பு: விரும்பினால் சிறிது வெண்ணெயை நாண் மேலே தடவலாம். பால் வெது வெதுப்பாக இருக்க வேண்டும். புளிக்காத தயிர் இருப்பது அவசியம். மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா மாவு சரியாக கலப்பது முக்கியம்)

பனீர் பட்டர் மசாலா

Story image

தேவையானவை:

பனீர் - 1 கிண்ணம்

பட்டர் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

வெங்காயம் -1

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

பால் - 1 டம்ளர்

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி

கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அரைத்த தக்காளி விழுதையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், வேறொரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ், உப்பு, பால் சேர்த்து கட்டி படாமல் கலக்கவும். பின்னர், வதங்கிய தக்காளியுடன்  பாலில் கலந்த மசாலா கலவையையும் சேர்த்து கிளறவும். அத்துடன் மீதமுள்ள பாலை சேர்த்து கொதிக்கவிடவும். பின் அதில் பனீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். பனீர்பட்டர்மசாலா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.