அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றித் திரிந்த திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகளையும், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதத்திலும், அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகியுள்ளது "பாசமான பார்வை' என்ற ஓர் ஆவணப்படம்.
இப்படத்துக்கான கதையை எழுதி, இயக்கி வருபவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் பெண் தொழிலாளியான குட்டிரோஜா (25).

தனது 13 வயது முதலே கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டதாக கூறும் இவர், வறுமை காரணமாக 9ஆம் வகுப்பு வரையே படித்துள்ளார். இருப்பினும் ஆர்வம் காரணமாக பீடி சுற்றும் தொழில் செய்த நேரம் போக, மற்ற நேரங்களில் கதை, கவிதைகள் எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டார். முற்போக்கு சிந்தனையுடன், சமூக சீர்திருத்த கருத்துகளை தனது எழுத்து மூலமாகவும், ஆவணப்படங்கள் மூலமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என எண்ணும் இவர், தான் எடுத்துள்ள முதல் ஆவணப்படத்தை சின்னத்திரையில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
""ஒரு நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், திருநங்கை ஒருவரது அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் திருநங்கைகள் சந்திக்கும் பல்வேறு இன்னல்களை என்னால் அறிந்து கொள்ளமுடிந்தது. அந்தப் பிரச்னைகளின் வெளிப்பாடே இந்த ஆவணப்படம்.
திருநங்கை ஒருவர் இளைஞனை திருமணம் செய்துகொண்டு, அதன் பிறகு அவர் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தியும், அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்கள் தம் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாகவும் வித்தியாசமான கதைக் களத்தோடு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அறிமுக கதாநாயகனாக விநோத் நடித்துள்ளார். டி.வி.புகழ் திருநங்கை ரோஸ் ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை பிம்பம் கிரியேட்டிவ் சொலுஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தை ஆலங்குளம் மற்றும் அருகேயுள்ள குருவன்கோட்டை, நல்லூர் ஆகிய பகுதிகளில் ஒளிப்பதிவு செய்தோம். ஒளிப்பதிவு செய்யப்பட்ட இடத்தில் கூடிய பெண்கள் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த படம் என்றதும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
வென்று வா தலைவா... தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம்!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாட்டம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


