வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றம் நகரம், கிராமப் பகுதி என அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவி உள்ளது. அரசு சேவைகளையே வாட்ஸ்ஆப்களில் பெறும் வகையில் சென்றுவிட்டது. அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ்ஆப் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
தற்போது கைப்பேசியில் இணையவசதி இல்லாமலே வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும் மல்டி டிவைஸ் பீட்டா என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கணினி மூலம் வாட்ஸ்ஆப் கணக்கை இணைத்து செயல்படுத்த வாட்ஸ்ஆப் வெப் உதவுகிறது. இதில் மல்டி டிவைஸ் பீட்டா சேவையின் மூலம் ஒரு முறை கியூஆர் கோட் இணைப்புடன் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை கணினியில் இணைத்துவிட்டால், பின்னர் உங்கள் கைப்பேசியில் இணைய வசதி இல்லாவிட்டாலும், கணினியில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம். இதுபோன்று அதிபட்சமாக நான்கு கணினிகளுடன் ஒருவர் தனது வாட்ஸ்ஆப் கணக்கை இணைக்கலாம்.
கைப்பேசியில் சார்ஜ் இல்லாமல் சுவிட்ஆப் ஆகிவிட்டாலோ, இணையவசதி இல்லாவிட்டாலோ இனி உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை கணினியில் பயன்படுத்தலாம். எனினும், 14 நாள்களாக தொடர்ந்து இயங்காமல் இருந்தால் கணினியில் இணைக்கப்பட்ட வாட்ஸ்ஆப் கணக்கு தானாக அழிந்துவிடும்.
இந்த சேவையை உங்கள் கைப்பேசியில் தொடங்க செய்ய வேண்டியவை:
வாட்ஸ்ஆப்பில் வலதுமேல்புறம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, லிங்கிடு டிவைசஸ் மல்டி டிவைஸ் பீட்டா கன்டினியூ ஆகியவற்றை கிளிக் செய்து அனுமதி அளித்துவிட்டு பின்னர் கணினியில் உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை ஒரு முறை இணைத்து கைப்பேசி இல்லாமலேயே வாட்ஸ்ஆப்பை செயல்படுத்தலாம். முதல் முறை இணைக்க கைப்பேசியில் இணைய சேவை அவசியம்.
உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கில் மல்டி டிவைஸ் பீட்டா சேவை வரவில்லை என்றால் உங்கள் வாட்ஸ்ஆப்பை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். இதுபோன்று பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானவையாக இருக்கும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. எனினும், உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கை பிறரின் கணினியில் இணைத்தால் அதை டெலிட் செய்துவிட்டு வெளியேறுவது பாதுகாப்பானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


