நம் அனைவரையும் எளிதில் வசப்படுத்தும் ஓர் ஊடகமாக உலகை ஆக்கிரமித்து வருகிறது திரைப்படம். திரைப்படத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திரைப்படம் பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் மிகவும் குறைவு. அவர்கள் தவிர, மற்றவர்களுக்கு திரைப்படம் ஒரு பொழுதுபோக்காகவும், கலை, இலக்கிய ரசிகர்களுக்கு ஒரு சிறந்த படைப்பாகவும் தெரிகிறது.
அதிலும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை, உயிர் நாடி எல்லாமே திரைப்படம்தான்.
திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இளைஞர்களிடம் சாதக, பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வன்முறை அதிகமுள்ள, ஆபாசம் அதிகமுள்ள திரைப்படங்கள் ஒருபுறம், சமூக விழிப்புணர்வை ஊட்டும் திரைப்படங்கள் இன்னொருபுறம் என பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே, இளைஞர்களிடையே திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பல்வேறு தன்மையுள்ளவையாக இருக்கின்றன.
எந்தவொரு தொழில்நுட்பத்திலும் நன்மையும், தீமையும் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. இளைஞர்களாகிய நாம், நமக்குத் தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
நேர்மறை தாக்கங்கள்:
1. வரலாறு
நிகழ்வுகளை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்வதற்கும் காட்சிகளின் வாயிலாக தெரிந்துகொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. காட்சிகளின் மூலமாக ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளும்போது அது எளிதில் மறக்காது. சினிமாவுக்காக சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டாலும் குறிப்பிட்ட ஒருவரின் வரலாறு, ஒரு சமூகத்தின் வரலாறு, அறிவியல், கண்டுபிடிப்புகள் என புதுப்புது விஷயங்களை காணொலி பதிவுகளின் வழியாகப் பார்க்கும்போது அது இளைஞர்களின் மனதில் எளிதாகப் பதிகிறது.
சாதனை படைத்தவர்களின் வரலாற்றுக் கதைகளும் இளைஞர்களிடையே நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றன.
2. கல்வி
மாணவர்கள் தங்கள் படிப்பைக் கைவிடுதலினால் ஏற்படும் விளைவுகளை பல திரைப்படங்கள் படம்பிடித்துக் காட்டி வருகின்றன. ஒருவன் கல்வி பெறுவதனால் வாழ்வில் எவ்வளவு முன்னேற்றம் அடைகின்றான் என்பதையும் கூறுகின்றன. இதுபோன்ற வாழ்வின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் இளைஞர்களிடையே அவற்றின் முக்கியத்துவத்தை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதனால் மாணவர்கள் கற்றலின் உண்மையான மதிப்பை உணரத் தொடங்குகிறார்கள்.
3. வாழ்வியல்
கல்வி ஒரு மாணவருக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வாழ்க்கைப் பாடங்களும் முக்கியம். அந்தவகையில், நிறைய திரைப்படங்கள் முக்கியமான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத் தருகின்றன.
கல்வியறிவு பெற்றவர்கள் எளிமையாக, ஆடம்பரமின்றி இருப்பதால் வாழ்வில் உன்னத நிலையை அடைகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. தீயவனை நல்லவன் வென்ற கதை, ஊழல் செய்பவனை நேர்மையாக இருப்பவன் வென்ற கதை என வாழ்வியலுக்குத் தேவையான கதைகள் சினிமாவில் இருக்கின்றன. நேர்மையாக, உண்மையாக இருந்தால் பல தடைகள் வந்தாலும் இறுதியில் வெற்றி நம்மைச் சேரும் என வலியுறுத்தும் கதைகளை உருவாகும் இயக்குநர்கள் இளைய சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களே.
4. சவால்களை எதிர்கொள்ளும் திறன்
இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழ்க்கையில் வெற்றி பெறுபவன் பல தடைகளை சவால்களை எதிர்கொண்ட மனிதனாக இருப்பான். திரைப்படங்களிலும் அதுபோன்ற பல காட்சிகள் உள்ளன. கதாநாயகனுக்கு தொடர்ந்து சோதனைகள் வருவது போலவும் அதை படிப்படியாக எதிர்கொண்டு இறுதியில் வெற்றி பெறுவது போலவும் திரைக்கதைகள் உருவாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட திரைப்படங்களைப் பார்க்கும் இளைஞர்களின் அடிமனதில் தடைகள் பல வந்தாலும் அதை நம்பிக்கையோடு எதிர்கொண்டால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம்
விதைக்கப்படுகிறது.
எதிர்மறை தாக்கங்கள்
1.வன்முறை:
இயக்குநர் ஒருவர் ஒரு கருத்தை இந்த சமூகத்துக்குச் சொல்ல முடிவெடுத்துவிட்டார். அந்த கருத்தை வெளிப்படுத்த வன்முறை, ஆபாசம், கொடுமைப்படுத்துதல் போன்ற அபாயகரமான, ஆபத்தான காட்சிகளை வைக்கும்போது அதைப் பார்க்கும் இளைஞர்களிடையே எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது.
நினைத்தவற்றைச் சாதிக்க வன்முறையைக் கையில் எடுக்கும் கதாநாயகர்கள் பலர்,
வெற்றியும் காண்கிறார்கள். இம்மாதிரியான காட்சிகள் இளைஞர்களிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் படம் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத காட்சிகள் புகுத்தப்படும்போது அது கருத்தில்லாத மோசமான ஒரு படைப்பாக மாறிவிடுகிறது.
2. வெற்று பொழுதுபோக்கு:
இதற்கு உதாரணமாக மசாலா படங்களை சொல்லலாம். ஒரு குடும்பம், காதல், வில்லன், சண்டை காட்சிகள் என்று திரும்பத் திரும்ப ஒரேமாதிரியான விதத்தில் மட்டுமே எடுக்கப்படுகின்ற திரைப்படம், இளைஞர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கின்றன.
கருத்தில்லாத, வெறும் ஹீரோயிசத்துக்காக எடுக்கப்படும் படங்களை இளைஞர்கள் தவிர்த்துவிட வேண்டும். அப்படியே பார்த்தால் அதை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே என எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. உளவியல் மாற்றங்கள்:
சில திரைப்படங்கள் உளவியல்ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காதலியை தொலைத்த காதலன் படும் வேதனையை சில படங்களில் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். காதல் வயப்பட்ட ஒரு பெண்ணோ ஆணோ அவர்களின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்கள், காதலை வெறுக்கும் பெண்ணின் பின்னால் சுற்றும் ஆண் உள்ளிட்ட காட்சிகள் இளைஞர்களிடம் ஒருவித தூண்டுதலை ஏற்படுத்துகின்றன.
மனதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.
ஒரு திரைப்படத்தில் அன்பு, வெறுப்பு, பழிவாங்குதல், காட்டுமிராண்டித்தனமான வன்முறை மற்றும் பல விரும்பத்தகாத நடவடிக்கைகள் என அத்தனையையும் ஒரு குறுகிய கால இடைவெளியில் காட்டப்படுகின்றன. ஆனால், எல்லாருடைய வாழ்விலும் அப்படி நடந்துவிடுவதில்லை. மிகவும் சாதாரண எளிமையான வாழ்க்கையை வாழும் ஒருவரிடம் இதுபோன்ற வன்முறையான எதிர்மறை நிறைந்த ஒரு வாழ்க்கையைக் காட்டும்போது அது அவரது வழக்கமான உண்மை வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இளம்தலைமுறையினரின் ஆழ்மனதில் அவை பதிந்து அவர்களுடைய பண்பிலும் , நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
திரைப்படம் எதற்காக?
பொழுபோக்கு என்பதையும் தாண்டி, மனதில் ஊடுருவும் தன்மை திரைப்படங்
களுக்கு இருப்பதால், இளைஞர்களாகிய நாம், அப்படியே அவற்றில் மூழ்கிவிடாமல், அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, எடுத்துக் கொள்ள வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு, பிறவற்றை மனதில் புகாமல் ஒதுக்கி விட கற்றுக் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


