‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செவ்வாயில் மனிதன்: காத்திருக்கும் சவால்கள்!

நிலவில் மனிதன் காலடி எடுத்து அரை நூற்றாண்டுக்கும் அதிகமான நிலையில், அடுத்ததாக செவ்வாய் கிரகத்தை நோக்கி மனிதகுலத்தின் பார்வை படியத் தொடங்கியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:20 pm

எஸ். ராஜாராம்


நிலவில் மனிதன் காலடி எடுத்து அரை நூற்றாண்டுக்கும் அதிகமான நிலையில், அடுத்ததாக செவ்வாய் கிரகத்தை நோக்கி மனிதகுலத்தின் பார்வை படியத் தொடங்கியுள்ளது.

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர், சீனாவின் ஜூரோங் ரோவர் என அடுத்தடுத்து ரோபாடிக் திட்டங்களைத் தொடர்ந்து மனிதர்கள் எப்போது செவ்வாயில் காலடி எடுத்து வைப்பார்கள் என்கிற கேள்வி எழுகிறது. இதுவரையிலான ஆளில்லா செவ்வாய் கிரக திட்டங்கள் மூலம் அங்கு பனிக்கட்டி வடிவில் தண்ணீர் உள்ளது உள்ளிட்ட பல தகவல்கள் கிடைத்திருப்பதன் மூலம் மனிதர்கள் செவ்வாயில் தடம் பதிப்பது சாத்தியம்தான் எனத் தெரிகிறது. ஆனால், எவ்வளவு விரைவில், நாம் அதற்குத் தயாரா?

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு 2030-இல் விண்வெளி வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் இப்போது விண்கலத்தைச் சுற்றி வரச் செய்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், செவ்வாயில் ஒரு காலனியையே உருவாக்கும் 100 ஆண்டு திட்டத்தை வகுத்து வருகிறது. செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவது தனது நீண்டகாலத் திட்டம் எனக் கூறியுள்ளது சீனா.

இவை அனைத்தையும்விட பெரிய லட்சியத்தை வைத்துள்ளார் கோடீஸ்வரர் எலன் மஸ்க். "ஸ்பேஸ் எக்ஸ்' என்ற விண்வெளித் திட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவரான அவர், 2026-இல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை தனது நிறுவனம் செயல்படுத்தும் என கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். ஆனால், அத்திட்டத்தில் சாதாரண மனிதர்களை அனுப்புவதில் உள்ள பிரச்னைகள் குறித்து விஞ்ஞானிகள் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு, "ஆரம்பத்தில் ஏராளமானோர் அப்பயணத்தில் உயிரிழக்கக் கூடும்' என பதிலளித்திருந்தார் மஸ்க்.

அண்ட கதிர்வீச்சு, தூசிப் புயல்களிலிருந்து தப்புவது முதல் ஆக்சிஜனையும், தண்ணீரையும் உற்பத்தி செய்வது வரை விண்வெளிப் பயணத்தில் பல சவால்கள் காத்திருக்கின்றன.

அதில் ஒன்று, பூமியும் செவ்வாயும் நீள்வட்டப் பாதை சுற்றுப் பாதையில் உள்ளதால் 35 மில்லியன் மைல் மற்றும் 249 மில்லியன் மைல் என்ற மாறுபட்ட தொலைவால் பிரிக்கப்பட்டுள்ளன. நிலவுக்குச் செல்ல ஒரு சில நாள்களே ஆகும் நிலையில், செவ்வாய் கிரக பயணமானது செவ்வாயும் பூமியும் விண்வெளி பயணத்துக்கு ஏற்றதாக இருக்கும் நிலையிலேயே சாத்தியமாகும்.

விஞ்ஞானிகளின் மற்றொரு பயம் சூரிய எரிப்புகள். சூரிய மண்டலத்தில் காணப்படும் மிகுந்த சக்திவாய்ந்த வெடிப்பாக இது கருதப்படுகிறது. ஓர் எரிப்பானது 100 மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளுக்கு சமமானது. செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலத்தில் சூரிய மற்றும் அண்ட கதிர்வீச்சிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் கவசம் இல்லை. செவ்வாயில் தூசி புயல்களின்போது சூரிய ஒளியே பல மாதங்கள் கிடைக்காமல் போகலாம். அச்சூழ்நிலையில்,  மின்சக்திக்கு சோலார் பேனல்களை நம்பியிருந்தால் உயிர் வாழ முடியாது. செவ்வாய் கிரகத்தில் போதுமான தண்ணீர் இல்லாமல் அங்கு மனிதர்கள் செல்வது சாத்தியமற்றது. இருப்பினும் அசாத்தியங்களையும் சாத்தியமாக்குவதுதானே விஞ்ஞானத்தின் பணி. பொறுத்திருந்து பார்ப்போம், செவ்வாய் கிரக பயணத்தை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.