வானியல் ஆய்வில் ரேடியோ தொலைநோக்கி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விண்மீன்கள், கோள்கள் ஆகியவை எதிரொளிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு ரேடியோ தொலைநோக்கிகள் செயல்படுகின்றன.
அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி உருவாக்கப்படவுள்ளது. ஸ்கொயர் கிலோமீட்டர் ஆரே அப்சர்வேட்டரி (எஸ்கேஏஓ) என்ற அமைப்பின் கவுன்சில் கடந்த வாரம் இதற்கான அனுமதியை அளித்துள்ளது. ஆஸ்திரேலியா, தெற்கு ஆப்பிரிக்காவில் அமைக்கப்படவுள்ள இந்த ரேடியோ தொலைநோக்கி 50 ஆண்டுகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா, சீனா, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து 2 பில்லியன் யூரோ மதிப்பில் இந்தத் தொலைநோக்கியை அமைக்கவுள்ளன. நிகழ் ஜூலை மாதம் இதற்கான பணி தொடங்கி 2029-ஆம் ஆண்டு நிறைவடையும்.
"ஸ்கொயர் கிலோமீட்டர் ஆரே' என்பதுதான் அந்த ரேடியோ தொலைநோக்கியின் பெயர். அந்தப் பெயருக்கேற்ப ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தென் ஆப்பிரிக்காவில் 197 டிஷ்களும், ஆஸ்திரேலியாவில் 1,31,072 ஆன்டெனாக்களும் அமைக்கப்படும். இதன் கட்டுமானப் பணி முழுமையாக முடிவடைந்து செயல்பாட்டுக்கு வந்ததும் ஆண்டுக்கு 710 பெராபைட் அறிவியல் தரவை இந்தத் தொலைநோக்கி உருவாக்கும்.
""பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் திறக்க உலகின் மிகப்பெரிய இரு ரேடியோ தொலைநோக்கி நெட்வொர்க்குகளை உருவாக்குவதன் மூலம் மனிதகுலம் பெரும் பாய்ச்சலை முன்னெடுத்து வருகிறது'' என்கிறார் எஸ்கேஏஓ இயக்குநர் பிலிப் டயமண்ட்.
பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பின் இயக்குநர்கள், ""அறிவியலின் அறியப்படாத எல்லைகளை ஆராய்ந்து, விண்மீன் திரள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாமம், தீவிரச் சூழல்களின் அடிப்படை இயற்பியல் மற்றும் முக்கிய செயல்முறைகளின் புரிதல் ஆகியவற்றை இந்த ரேடியோ தொலைநோக்கி ஆழப்படுத்தும்'' என நம்புகின்றனர்.
இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் 100 நிறுவனங்களைச் சேர்ந்த 500 பொறியாளர்கள் இந்தத் தொலைநோக்கியை வடிவமைக்கும் பணியில் ஈடு
பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


