வேலை... வேலை... வேலை...
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: அசிஸ்டன்ட் புராஜெக்ட் என்ஜினியர்
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.35,000 - ரூ.54,600
வயது வரம்பு: 23.12.2021 தேதியின்படி 21 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:www.rida.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து psecontract@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் மற்றொரு நகலை எதிர்காலப் பயன்பாட்டிற்காக கைவசம் வைத்துக் கொள்ளவும்.
மேலும் விவரங்கள் அறிய: https://rlda.indianrailways.gov.in/uploads/Vacancy_RLDA_Contract_02.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.12.2021
பணி: பைனான்சியல் மேனேஜ்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.60,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிஏ,சிஎஸ், சிஎம்ஏ அல்லது எம்பிஏ(நிதியியல்) பாடப்பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் சேர்ச்சி பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அக்கவுண்டன்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல், கணக்கியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது சிடபிள்யூஏ இன்டெர்/ சிஏ இன்டெர் ஆகிய படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: புராஜெக்ட் அசோசியேட்
சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல் அல்லது ஐடி பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: செக்ரட்டேரியல் அசிஸ்டன்ட்/ டேட்டா என்ட்ரி
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
பணி: டிஸ்ட்ரிக்ட் கோ-ஆர்டினேட்டர்ஸ்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டிஸ்ட்ரிக்ட் புராஜெக்ட் அசிஸ்டன்ட்ஸ்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ அல்லது மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்து பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பிளாக் கோ-ஆர்டினேட்டர்ஸ்
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பிளாக் புராஜெக்ட் அசிஸ்டன்ட்
காலியிடங்கள்: 52
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
முகவரி: Director Cum Mission Director, Integrated Child Development Project Schemes, No.1, Pammal Nallthambi Street, M.G.R. Road, Taramani, Chennai - 113.
மேலும் விவரங்கள் அறிய: https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.12.2021
பணி: கிளார்க் / டைப்பிஸ்ட் (ஸ்போர்ட்ஸ் கோட்டா)
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ. 5,200 -ரூ.20,200
வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு தகுதி: அறிவிப்பில் வெளியிட் டுள்ள விளையாட்டுகளில் ஏதாவதொன்றில் சர்வதேசப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவதொன்றில் பங்குபெற்று குறைந்தபட்சம் 3 ஆவது இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 01.04.2019 பின்னர் பெற்ற விளையாட்டுச் சாதனைகள் மட்டுமே கணக்கிடப்பட்டும். தற்போதும் சம்பந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrcpryj.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.12.2021
பணி: மெசென்ஜர் (எம்டிஎஸ்) - 02
பணி: வாட்ச்மேன் (எம்டிஎஸ்) - 01
பணி: சஃபைவாலா (எம்டிஎஸ்) - 03
பணி: மெஸ் வெயிட்டர்- 01
பணி: ரூம் ஆர்டர்லி - 03
பணி: மசால்ஜி - 012
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைககள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10601_26_2122b.pdf என்ற லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
முகவரி: The Commandant, Selection Centre South, Cubbon Road, Bangalore - 560 042.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.12.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...