2021-ஆம் ஆண்டு முடிவடையும் தறுவாய்க்கு வந்துவிட்டோம். 2020-இல் கரோனா என்றால், 2021-இல் அதற்கான தடுப்பூசி என்று உலகம் மாற்றம் கண்டு கொண்டே செல்கிறது.
நிகழாண்டில் கூகுள் தேடுதளத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள், செய்தி, நிகழ்வுகள், தலைப்புகளை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவையும், கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாது என்பதைப்போல், வழக்கம்போல் கிரிக்கெட்தான் இந்தியத் தேடலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஐபிஎல் போட்டிதான் அதிகமானோரின் தேடலில் முதலிடம் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பதிவு செய்யவும், செலுத்திக் கொண்டவர்கள் சான்றிதழ் பெறவும் உதவும் கோவின் இணையதளத் தேடல் இரண்டாவது இடத்திலும், டி-20 உலக கோப்பை கிரிக்கெட் மூன்றாவது இடத்தையும், யுரோ உலக கோப்பை கால்பந்து போட்டி நான்காவது இடத்தையும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
செய்திகள் தேடலில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன், கரோனா தடுப்பூசி, கிரிப்டோ கரன்ஸி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
அருகே உள்ள சேவைகள் என்ற வார்த்தைத் தேடலில் கரோனா தடுப்பூசி அருகே எங்கே கிடைக்கும், கரோனா பரிசோதனை, உணவு விநியோகம்,
ஆக்சிஜன் சிலிண்டர், கரோனா மருத்துவமனை எங்கு உள்ளது ஆகியவை அடுத்தடுத்து அதிகமாகத் தேடப்பட்டுள்ளன.
இதேபோல், கரோனா தடுப்பூசியைப் பெற எப்படி பதிவு செய்வது, தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை எப்படி பெறுவது, ஆக்சிஜன் அளவை எப்படி கூட்டுவது, பான், ஆதார் எண்களை எப்படி இணைப்பது, வீட்டில் ஆக்சிஜனை எப்படி உற்பத்தி செய்வது என்பன போன்ற தேடல்கள் எப்படிச் செய்வது பிரிவில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
கரோனா இரண்டாம் அலையால் நிகழாண்டில் சிறிது நாள்கள் முடங்கி போயிருந்தாலும், கூகுள் தேடல் அனைவரையும் வீட்டில் இருந்தபடியே சிந்திக்கவும் தேவையானவற்றை தேடவும் வைத்துள்ளது. அடுத்து வரும் ஆண்டு தனிமையைப் போக்கி இனிமையை அளிக்கும் என்று எதிர்பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


