தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செவ்வாய்க்குப் பின் வெள்ளி!

சூரிய குடும்பத்தின் 2-ஆவது கிரகமான வெள்ளியில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவு அறிவியல் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 4:00 pm

சூரிய குடும்பத்தின் 2-ஆவது கிரகமான வெள்ளியில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவு அறிவியல் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், சூரிய குடும்பத்தில் பூமியைத் தவிர வேற்றுக் கிரகத்தில் உயிர்கள் இருந்தனவா, அதற்கான வாழ்க்கைச் சூழல் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் வெள்ளிக்கு இதுவரை கடைசி இடமே கிடைத்து வந்தது. "நரகம்' என வர்ணிக்கப்படும் அக்கிரகத்தின் வளிமண்டல சூழல்தான் அதற்குக் காரணம்.
வெள்ளியின் தரைப்பரப்பில் 400 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும். அதன் கடுமையான வளிமண்டலம் காரணமாக அங்கு தரையிறங்கும் விண்கலங்கள் நீண்டநேரம் தாக்குப் பிடித்து ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியாது.
சோவியத் காலத்தில் ரஷியா பல விண்கலங்களை வெள்ளிக்கு அனுப்பியது. அவற்றில் 10 விண்கல சோதனைகள் வெற்றி பெற்றன. ஆனால், கடுமையான வெப்பம் காரணமாக, நீண்ட நேரம் ஆராய்ச்சியில் ஈடுபட முடியாமல் அந்த விண்கலங்கள் செயலிழந்து போயின.
இந்நிலையில்தான் பிரிட்டனின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேன் கிரீவ்ஸ் தலைமையிலான வானியலாளர்கள், உயிர் வேதியியலாளர்கள் கொண்ட குழு வெள்ளி கிரகத்தை தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து, வெள்ளியின் தரைப்பரப்பிலிருந்து 50 கி.மீ. உயரத்தில் பாஸ்பைன் எனப்படும் வாயு காணப்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.
"நேச்சர் அஸ்ட்ரானமி' என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பாஸ்பைன் வாயுவின் மூலக்கூறானது ஒரு பாஸ்பரஸ், 3 ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டது. இந்த வாயு பூமியில் ஆக்சிஜன் இல்லாத சூழலில் வாழும் பாக்டீரியாக்களால் உருவாக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் அத்தகைய பாக்டீரியாக்கள் வெள்ளி கிரகத்தில் இருக்கலாம் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
இதன் மூலம் பூமிக்கு வெளியே வாழ்க்கைச் சூழலுக்கான வலுவான ஆதாரமாக இந்தக் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் விஞ்ஞானிகளின் பார்வை செவ்வாய் கிரகத்திலிருந்து வெள்ளியை நோக்கித் திரும்பியுள்ளது. நிகழாண்டு மட்டும் செவ்வாய் கிரகத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம், சீனா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அடுத்தகட்டமாக 4 விண்வெளித் திட்டங்களைப் பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் வாயு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அடுத்த 4 திட்டங்களில் ஒன்று அல்லது இரண்டை வெள்ளி கிரக ஆராய்ச்சிக்கு திருப்ப பரிசீலித்து வருகிறது. "வெள்ளிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரம்' என இதுகுறித்து நாசா நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறியிருப்பதும் அதை உறுதிப்படுத்துகிறது.
வெள்ளிக்கு இதுவரை விண்கலத்தை அனுப்பியுள்ள ஒரே நாடான ரஷியா மீண்டும் வெள்ளியை நோக்கி கவனத்தைத் திருப்பியுள்ளது. "ரஷியாவின் விண்கல ஆராய்ச்சியில், வெள்ளி கிரகத்தில் இதுவரை உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக கண்டறியப்படாவிட்டாலும், அதன் தரவுகள் மிகச்சிறந்தவை' என ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் டிமிட்ரி ரோசோஜின் தெரிவித்துள்ளார்.
இதைவிட ஒருபடி மேலே சென்று, "வெள்ளி கிரகமே ரஷியாவின் கிரகம்தான்' என உரிமை கோரி சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
மேலும், சர்வதேச பங்களிப்பின்றி தன்னிச்சையாக வெள்ளி கிரக ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாகவும் ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
பூமியைவிட பன்மடங்கு வெப்பநிலை நிலவும் கிரகமான வெள்ளியில் உயிர்கள் வாழ்கின்றன என இந்த பாஸ்பைன் கண்டுபிடிப்பின் மூலம் முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆனால், அதற்கான வாய்ப்பு இருப்பதை இந்தக் கண்டுபிடிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.