பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே உயிர்கள் வாழ்வதற்கான ஒரே கிரகமாக நம்பப்படுகிறது. இருப்பினும் உயிர்கள் இருந்ததற்கான, வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் கொண்ட கிரகங்கள் சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ளனவா என்கிற ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு வாஷிங்டன் மாகாண பல்கலைக்கழகப் பேராசிரியர் டிர்க் சகல்ஸ்- மகுச் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில், பூமியைவிட உயிர்கள் வாழ்வதற்கான சிறந்த சூழல்களைக் கொண்ட 24 கிரகங்களை விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் "அஸ்ட்ரோபயாலஜி' இதழில் வெளியாகியுள்ளன.
சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ள 4500 கிரகங்களில், பூமியை விட பழைய, பெரிய, வெப்பமான, ஈரமான கிரகங்களை இந்த ஆராய்ச்சியின்போது விஞ்ஞானிகள் தேடினர். இந்த 4 அளவுகோல்களில் ஓரளவுக்கு நெருக்கமாக இருந்த 24 கிரகங்கள், பூமியை விட சிறந்த வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை அனைத்துமே பூமியிலிருந்து 100 ஒளி ஆண்டுகள் (ஓர் ஒளி ஆண்டு என்பது சுமார் 9 லட்சம் கோடி கி.மீ.) தொலைவில் உள்ளன. இவற்றை நெருக்கமாகப் பார்ப்பது கடினம். என்றாலும், நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, லூவியர் விண்வெளி தொலைநோக்கி, ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பிளாட்டோ தொலைநோக்கி போன்ற எதிர்கால விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தால் இந்தக் கிரகங்கள் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த ஆய்வில் பூமியைவிட அளவிலும், எடையிலும் அதிகமான கிரகத்தை விஞ்ஞானிகள் தேடியதற்கு முக்கியமான காரணம் உள்ளது. பூமியைவிட 10 சதவீதம் அளவில் பெரிய கிரகத்தில் வாழ்க்கைச் சூழலுக்கான அதிக நிலப்பகுதி இருக்கும். அதேபோல பூமியின் நிறையை விட ஒன்றரை மடங்கு அதிகம் கொண்ட கிரகமானது, கதிரியக்கச் சிதைவின் மூலம் அதன் உட்புற வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்; மேலும், நீண்டகாலத்துக்கு வளிமண்டலத்தைத் தக்க வைக்க வலுவான ஈர்ப்புசக்தியைக் கொண்டதாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
உயிர்கள் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். பூமியைவிட 5 டிகிரி செல்சியஸ் கூடுதலான வெப்பநிலையும், ஈரப்பதத் தன்மையையும் கொண்டிருந்தால் அந்தக் கிரகம் வாழ்க்கைச் சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால், அந்த அம்சங்களையும் இந்த 24 கிரகங்களில் விஞ்ஞானிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
இந்த 24 கிரகங்களில் ஒரு கிரகம் கூட விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்ட அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் ஒரே ஒரு கிரகம் மட்டும் அளவுகோல்களில் பெரும்பாலானவற்றைப் பூர்த்தி செய்தது. அக்கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்பதே அதன் பொருள்.
""அடுத்தடுத்த விண்வெளி தொலைநோக்கிகள் மூலம் நமக்கு ஏராளமான தகவல்கள் கிடைக்கும். அதற்கு முன்னதாக ஆய்வுக்கான சில இலக்குகளை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அந்த வகையில் இந்த 24 கிரகங்களில் கூடுதல் ஆராய்ச்சியை மேற்கொள்வது பலனளிக்கும். நமது பூமியை விட வாழ்வதற்கான சிறந்த சூழல்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கும் என்பதால், இரண்டாவது பூமியைத் தேடுவதில் மிக கவனமாக இருக்க வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் சகல்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


