பிரபஞ்சத்தில் பூமியைப் போன்று உயிர்கள் வாழும் அல்லது வாழ்க்கைச் சூழலைக் கொண்ட வேற்று கிரகங்கள் உள்ளனவா என்கிற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூரியனை பூமி சுற்றி வருவதுபோல ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகமானது "எக்ஸோபிளானட்' என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நமது விண்மீன் மண்டலத்தில் ஏற்கெனவே 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எக்ஸோபிளானட்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நமது வீண்மீன் மண்டலத்தில் பூமியைப் போன்றே உயிர்கள் வாழக் கூடிய சாத்தியகூறுகள் கொண்ட 30 கோடி கிரகங்கள் இருக்கலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. 2009 முதல் 2018- ஆம் ஆண்டு வரை செயல்பட்ட கெப்லர் விண்வெளி தொலைநோக்கியின் தரவுகளை ஆய்வு செய்து இந்த முடிவுக்கு நாசா வந்துள்ளது.
நாசாவின் அமெஸ் மையத்தை சேர்ந்த ஸ்டீவ் பிரைஸன் தலைமையிலான 44 வானியலாளர்கள் கெப்லரின் தரவுகளை இரு ஆண்டுகளாக ஆய்வு செய்து இந்தக் கண்டுபிடிப்பைத் தந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் "அஸ்ட்ரானாமிகல் ஜர்னல்' என்கிற இதழில் வெளியாகியுள்ளன. இது தோராயமான மதிப்பீடுதான் எனவும், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தத் தோராயமான மதிப்பீட்டைப் பெறுவதற்காக வயது மற்றும் வெப்பநிலை அடிப்படையில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் தேடினர். அவற்றில் எத்தனை நட்சத்திரங்கள் தம்மைச் சுற்றி வரக் கூடிய கிரகங்களைக் கொண்டுள்ளன என்கிற முடிவுக்கு வந்தனர். கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதை ஆதரிக்கக்கூடிய "கோல்டிலாக்ஸ் மண்டலத்தைக்' கண்டறிவதற்காக அதன் நட்சத்திரத்திலிருந்து ஒரு கிரகம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் "கயா' மிஷனும் உதவியது.
தற்போதைய மதிப்பீடுகளின்படி விண்மீன் மண்டலத்தில் சூரியனைப் போன்று சுமார் 400 கோடி நட்சத்திரங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில், 30 கோடி நட்சத்திரங்களாவது தம்மை சுற்றி வரக் கூடிய ஒரு கிரகத்தைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி பார்த்தால் பூமியைப் போன்று உயிர்கள் வாழும் சூழலைக் கொண்ட 30 கோடி கிரகங்கள் நமது விண்மீன் மண்டலத்தில் இருக்கலாம் எனவும், அவற்றில் அருகில் இருக்கும் கிரகமானது பூமியிலிருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


