சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் ஆய்வுப் பணியைத் தொடங்கியதன் 20-ஆவது ஆண்டு தினத்தை நவம்பர் 2-ஆம் தேதி கொண்டாடியது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. உலகில் இதுவரை விஞ்ஞான வளர்ச்சியின் சாதனை என அறிவியல் உலகம் கொண்டாடும் விஷயங்களில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
இந்த விண்வெளி நிலையத்தை நிர்மாணிக்கும் பணி 1998-இல் தொடங்கப்பட்டது. இருப்பினும் 2000-ஆவது ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதிதான் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று தங்கி தங்களது ஆய்வுப் பணிகளைத் தொடங்கினர். அன்றுமுதல் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் அங்கு விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் குழுவில் நாசாவின் வில்லியம் ஷெப்பர்டு, ரஷிய விண்வெளி வீரர் யுரி கிட்ஷென்கோ, செர்ஜி கிரிர்களேவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கஸகஸ்தானில் இருந்து 2000, அக்டோபர் 31-ஆம் தேதி புறப்பட்ட ரஷியாவின் சோயுஷ் விண்கலம் மூலம் சென்ற அவர்கள், நவ. 2-ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் காலடி எடுத்துவைத்தனர். அன்று முதல் இந்த 20 ஆண்டுகளில் 19 நாடுகளைச் சேர்ந்த 241 விண்வெளி வீரர்கள் அங்கு சென்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா, ரஷியா, கனடா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய 5 நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களின் முதன்மையான பங்களிப்பு மற்றும் பல்வேறு நாடுகளின் உதவியுடன் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையம் மணிக்கு 17.500 மைல் வேகத்தில் பயணம் செய்கிறது. பூமியை 90 நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாகக் கட்டி முடிக்க 11 ஆண்டுகள் ஆகின. தற்போதைய நிலையத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரையிலான தொலைவு 357 அடியாகும். மொத்த எடை 1 மில்லியன் பவுண்ட்.
விண்வெளி நிலையத்தில் பாகங்களைப் பொருத்துவதற்காகவும், பராமரிப்புப் பணிக்காகவும் விண்வெளி வீரர்கள் 221 முறை விண்வெளி நடை (ஸ்பேஸ் வாக்) சென்றுள்ளனர். நாசா விண்வெளி வீராங்கனையான பெக்கி விட்ஸன் என்பவர் மொத்தம் 665 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து சாதனை படைத்துள்ளார். பங்களிப்பு நாடுகளின் நிதியுதவியுடன் 2024-ஆம் ஆண்டு வரை சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்ந்து செயல்படுவதில் பிரச்னை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2028 வரை அதை நீடிக்கச் செய்வதற்கான நிதியுதவியை அளிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா இறுதி செய்து வருகிறது. சந்திரனில் மேற்பரப்பில் நீண்டகாலம் தங்கி ஆராய்சிப் பணி மேற்கொள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது, கார்பன் டை ஆக்ûஸடை வடிகட்டுவது போன்ற ஆய்வுகள் முக்கியமானவையாகும். அதற்கான ஓர் ஆய்வகமாக சர்வதேச விண்வெளி நிலையம் பயன்படுகிறது.
சமீபகாலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனம் மூலம் விண்வெளி வீரர்களை அங்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை.
இந்த முயற்சி தொடர்ந்து வெற்றி பெற்றால் 2024-க்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் ஒரு விண்வெளி சுற்றுலாத் தலமாக மாறுவதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


