2018 - ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் "லென்ஸ்' ஆப், மொழி பெயர்ப்பு மன்னன் என்றே கூறலாம். அதுவும், கூகுள் லென்ஸ் ஆப்பை ஆன் செய்து ஸ்மார்ட்போன் கேமராவைக் காட்டினால் போதும், நமக்குத் தெரியாத மொழியில் உள்ள எழுத்துகள், தெரிந்த மொழிக்கு உடனடியாக மொழிப் பெயர்ப்பு செய்யும் மந்திரக் கோலாக அது உள்ளது.
வெறும் எழுத்துகள் மட்டுமின்றி, பிறர் பேசும் மொழியையும் நமக்குத் தெரிந்த மொழியில் உடனடியாக மாற்றவும் செய்கிறது.
தற்போது மேலும் ஒரு புதிய அம்சமாக, கையால் எழுதப்பட்டதை "காப்பி' செய்து கணினியில் எழுத்து வடிவத்தில் "பேஸ்ட்' செய்வதை கூகுள் லென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. முன்பு இந்த வசதி ஸ்மார்ட் போன்களில் மட்டுமே செய்யக் கூடியதாக இருந்தது. தற்போது, காப்பி செய்யப்பட்டதை கணினி அல்லது மடிக்கணினியில் உள்ள "வேர்ட்' பைலில் பேஸ்ட் செய்யலாம். இதை செய்வதற்கு ஸ்மார்ட்போனிலும், கணினியிலும் ஒரே கூகுள் அக்கவுண்ட்டை வைத்திருக்க வேண்டும். கூகுள் லென்ûஸயும், கணினியில் உள்ள கூகுள் குரோமையும் புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் கையால் எழுதப்பட்டதை கூகுள் லென்சில் காப்பி செய்து, "சேவ் டூ கம்ப்யூட்டர்' என்பதை கிளிக் செய்து, பின்னர் மடிக்கணினி, கணினி ஆகியவற்றில் உள்ள "வேர்ட்' பைலில் சென்று "பேஸ்ட்' செய்து கொள்ளலாம். சுமார் 50 சதவீதமாவது கையெழுத்து தெளிவாக இருந்தால்தான் காப்பி செய்ய இயலும்.
மேலும் புதிய அம்சமாக, ஒரு மொழியின் வார்த்தை அல்லது வாக்கியத்தை எப்படித் தெளிவாக உச்சரிக்க வேண்டும் என்பதையும் கூகுள் லென்ஸ் செய்கிறது. வார்த்தை அல்லது வாக்கியத்தைத் தேர்வு செய்தால்போதும், அதன் தெளிவான உச்சரிப்பை ஆடியோ வடிவில் கேட்கலாம். இந்த வசதி புதிதாக மொழிகளைக் கற்க விரும்புவோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.
100-க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளடக்கிய கூகுள் லென்ஸ் புதிதாக சாதிக்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


