கரோனாவின் கொடூரத் தாக்கத்தால் உலகத்தில் உள்ள 195 நாடுகளில் 116 நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் சுமார் 400 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 100 கோடிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். இதில் வீட்டில் இருந்தே பணியாற்றும் ஊழியர்களும் அடங்குவார்கள். ஊரடங்கு அறிவித்தவுடன் வீட்டிலேயே இருக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த இவர்கள், ஊரடங்கு காலம் நீண்டு கொண்டே செல்வதால் கலக்கத்திலும், மன அழுத்தத்திலும் மூழ்கி உள்ளனர். இது அவர்கள் தினந்தோறும் பயன்படுத்தும் கூகுள் தேடல் மூலம் வெளிப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக "மன அழுத்தம்' தொடர்பான தேடல் கூகுளில் அதிகரித்துள்ளது. மனஅழுத்தத்திற்கான தீர்வுகளை மிúஸாராம், புதுச்சேரி, அந்தமான் நிகோபரைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் தேடல் செய்துள்ளனர். பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் உள்ளவர்கள் மன அழுத்தத்துக்கான தீர்வுகளை குறைவாகவே தேடி உள்ளனர்.
கரோனாவால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஜெர்மனி நாட்டின் நிதி அமைச்சர் தாமஸ் தற்கொலை செய்து கொண்ட மார்ச் 29 -ஆம் தேதியன்று "தற்கொலை' தொடர்பான தேடல்கள் அதிகமான அளவில் இருந்துள்ளன. அதற்குப் பிறகு இந்தியாவில் தற்கொலை தொடர்பான தேடல் இல்லை என்பது சற்று ஆறுதல் தரும் விஷயம்.
இதைத் தவிர, பல்வேறு வகையான உணவு பொருள்களைச் சமைப்பதற்கான வீடியோ தேடலும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. பிற நாட்டை ஒப்பிடும்போது இந்தத் தேடல் இந்தியாவில் விரைவாக அதிகரித்துள்ளது.
மேலும், வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளப்படும் உடற் பயிற்சி வீடியோக்கள், யூ டியுப், நெட்பிளிக்ஸ், அமேசான் தேடல்களும் கூகுளில் அதிகரித்துள்ளன. கரோனா முடக்கத்தால் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதால், இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறித்த தேடல்களும் கூகுளில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


