தற்போது உலகத்தையே உலுக்கி வருகிறது கரோனா என்ற தொற்று நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பது என்பது சவாலான விஷயமாகும்.
பல ஊர்களில் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளவர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள் எனவும், மருத்துவமனையில் இருப்பவர்கள் தப்பியோடிவிட்டனர் எனவும் செய்திகள் வருகின்றன. அப்படி தப்பியோடும் நபர்கள் மூலமாக மேலும் பலருக்குத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களையும், மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பவர்களையும் கண்காணிக்க, "தானியங்கி கோவிட் 19' என்ற கருவியை விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை இரண்டாம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவர் ஜி.வெங்கடேஷ் கண்டு பிடித்துள்ளார். இது குறித்து வெங்கடேஷ் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
""தமிழகத்தில் கரோனா பரவாமல் தடுக்க பலர் வீட்டிலும், மருத்துவமனையிலும் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இவர்கள் பலர் வெளியே சென்றுவிடுகிறார்கள் என செய்தி வந்ததையடுத்து, இவர்களை கண்காணிக்க கருவி கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். துறை பேராசிரியர் எஸ். அன்பரசி வழிகாட்டுதலின் அடிப்படையில், "தானியங்கி கோவிட் 19' என்ற கருவியைத் தயாரித்தேன்.
இந்த கருவியில் பிஐஆர் சென்சார், பிளக்கில் இணைக்கும் பவர் சப்ளை யூனிட், ஆர்டினோ, ஜிஎஸ்எம் மாடுல்,ரெக்ட்டிஃபயர், ரிசீவர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இதனை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுக் கண்காணிப்பில் உள்ள நபர்களின் வீட்டின் நிலைக் கதவில் பொருத்தி விட வேண்டும். இதனை தாண்டி யார் வீட்டிருந்து வெளியே சென்றாலும் , பிஐஆர் சென்சார் மூலம் கண்ட்ரோல் அறைக்குச் சென்று அங்கு இணைக்கப்பட்டுள்ள தொலை பேசிக்கு அழைப்பு செல்லும்.
அதாவது தொலை பேசி ஒலிக்கும். இதையடுத்து கண்ட்ரோல் அறையில் இருப்பவர் வீட்டிலிருந்து யார் வெளியே செல்கிறார்கள் எனக் கேட்டறிந்து, கண்காணிப்பில் உள்ளவர் வெளியே சென்றால் உடனடியாக அவரைத் தேடத்
தொடங்கி விடுவார்கள்.
மேலும் இந்தக் கருவியைக் கைபேசி எண்ணுடன் இணைத்திருந்தால், அதற்கும் உடனடியாக குறுந்தகவல் சென்றுவிடும். இதனை மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளவர்களின் அறை நிலைக்கதவில் பொருத்தும் போது, கண்காணிப்பில் உள்ளவர்களின் கையில் கடிகாரம் வடிவில் உள்ள டிரான்ஸ்
மீட்டரைப் பொருத்த வேண்டும்.
இந்த டிரான்ஸ்மீட்டர் தொடந்து, சமிக்ஞைகளை ரிசீவருக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். இதில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ, தனிமைப்படுத்தப்பட்டவர் கடிகாரத்தைச் சேதப்படுத்தினாலோ மற்றும் அறையை வீட்டு வெளியேறினாலோ அந்த நபரின் பெயர் , முகவரி, அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் அந்தப் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடும். இதன் மூலம் அந்த நபர் கண்காணிக்கும் அறையிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க இயலும். இது தற்போது மிகவும் பயன்படும் கருவியாகும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


