எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முகநூலில் இருந்து கூகுளுக்கு!

முகநூலில் தங்கள் போட்டோக்களைப் போட்டு பிறர் அதை "லைக்', "ஷேர்' "டேக்' பண்ண வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வருகின்றன.

News image
Updated On :15 ஜூன் 2020, 6:30 pm

முகநூலில் தங்கள் போட்டோக்களைப் போட்டு பிறர் அதை "லைக்', "ஷேர்' "டேக்' பண்ண வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வருகின்றன. இதனால் நவீன கேமரா உள்ள விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள், சந்தையில் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

ஏராளமான போட்டோக்கள் ஸ்மார்ட் போன்களில் தேங்கிவிடுவதால், இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஸ்மார்ட் போன்களில் எடுத்த போட்டோக்களை நேரடியாக கூகுள் போட்டோக்களில் பதிவேற்றி வைத்து கொள்ளலாம்.

2004 -ஆம் ஆண்டு ஃபேஸ்புக் தொடக்கத்தில் இருந்து அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்து பாதுகாக்க வேண்டியதாகி இருந்தது.

இந்நிலையில், ஃபேஸ்புக்கில் உள்ள போட்டோக்களை அப்படியே கூகுள் போட்டோக்களில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கும் புதிய சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் ஃபேஸ்புக் செட்டிங்சில் சென்று "யுவர் ஃபேஸ்புக் இன்ஃபர்மேஷனை' கிளிக் செய்து "டிரான்ஸ்பர் ஏ காப்பி ஆப் யுவர் ஃபோட்டோஸ் ஆர் வீடியோ'வை கிளிக் செய்து ஃபேஸ்புக்கின் பாஸ்வேர்டை மீண்டும் டைப் செய்தால்போதும்.

உங்கள் போட்டோக்களை கூகுள் போட்டோக்களில் பதிவேற்றம் செய்துவிடலாம். போட்டோ அல்லது வீடியோ என தனித்தனியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். கணினி அல்லது ஸ்மார்ட் போன்களிலும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

முன்பு குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த இந்த சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளது. பழைய புகைப்படங்களை கூகுள் போட்டோஸில் பதிவேற்றம் செய்துவிட்டு ஃபேஸ்புக்கில் அழித்துவிடுவதுதான் பாதுகாப்பானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.