எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெண்கள் பாதுகாப்பு... முகநூலில் புதிய சேவை!

மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களைப் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

News image
Updated On :9 ஜூன் 2020, 4:25 pm

மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களைப் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்புடன் பயன்படுத்த தவறுவதால், சிலர் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள். குறிப்பாக, பெண்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் பல்வேறு இன்னல்களுக்கும், மிரட்டல்களுக்கும் ஆளாகின்றனர். முகநூலில் பகிரப்படும் பெண்களின் புகைப்படங்களை எடுத்து தவறாகச் சித்திரிக்கும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அதிலும், பள்ளி, கல்லூரி மாணவிகள், பணியாற்றும் பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி வாழ்க்கையை முடித்து கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடுகின்றனர்.

நீண்ட காலம் நீடித்து வரும் இந்தப் பிரச்னைக்கு முகநூல் நிறுவனம் தற்போது தீர்வு கண்டுள்ளது. "புரொஃபைல் லாக்' எனும் புதிய சேவையை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புரொஃபைலை லாக் செய்துவிட்டால், நண்பர்கள் மட்டுமே உங்கள் விவரங்களைக் காண முடியும். உங்கள் சிறிய அளவிலான புரொஃபைல் போட்டோவை மட்டுமே பிறர் பார்க்க முடியும். அதைப் பதிவிறக்கம் செய்யவோ, ஜூம் செய்தோ காண முடியாது. உங்களது போட்டோக்களையும், விவரங்களையும் வெளியாட்களால் காண இயலாது. ஆனால், அவர்கள் உங்களை டேக் செய்து பதிவிடலாம்.

புரொஃபைல் லாக் செய்ய, முகநூலில் உங்கள் பெயருக்கு கீழே உள்ள "லாக் புரொஃபைல்' என்பதைக் கிளிக் செய்து மீண்டும் உறுதி செய்தால் போதும். எனினும், இந்த லாக்கை விடுவித்தால்தான் உங்களுடையே பதிவுகளை பொது வெளியில் காண முடியும். புரொஃபைல் லாக்கை மீண்டும் கிளிக் செய்து விடுவிப்பதும் எளிதானதுதான்.

இந்தச் சேவையை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து இந்த புதிய சேவையைப் பாதுகாக்க உதவினாலும், நண்பர்களைப் போல நடிப்பவர்களை நாம்தான் அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.