டிஜிட்டல் கேமராவும், மொபைல் கேமராவும் வந்த பிறகு கேராக்களை பறக்கவிட்டு, ஓடவிட்டு, தண்ணீரில் மூழ்கவிட்டு - பருந்துப் பார்வை, கழுகுப் பார்வை, மீன் பார்வை எனப் பல பார்வைக் கோணங்களில் பல்வேறு வகையிலான விடியோ, புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
இந்த விடியோக்களைப் பார்க்கும்போது, கேமரா எதன் மீது பொருத்தப்பட்டுள்ளதோ அந்த பிராணிகளின் பார்வையே நமது பார்வையாக மாறிவிடுகிறது. ஆனால் அந்த விடியோவில் பதிவாகும் ஒவ்வொரு காட்சியும் அந்தப் பிராணிகளைக் கொண்டு ஆய்வு நடத்தும் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கும் அரிய தகவல்களாக உள்ளன.
தற்போது வண்டின் முதுகில் ரோபோ கேமரா ஒன்றைப் பொருத்தி முதல் முறையாக அதன் தலை அசைவுகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
வண்டிற்குச் சுமையாக இல்லாத வகையில் வெறும் கால் மில்லி கிராம் எடை கொண்டது இந்த ரோபோகேமரா. வண்டு சிறகடித்து பறப்பதற்கேற்ப சில மணி நேரம் ஒருபுறமாகவும், சாய்ந்தும் வண்டுக்கு பாரம் இல்லாம் செயல்படுகிறது.
நொடிக்கு 5 பிரேம்களும், 60 டிகிரி சுழன்றும் படம்பிடிக்கும் மிகச் சிறிய கேமராவும், ஸ்மார்ட் போனுக்கு விடியோவை அனுப்பும் டிரான்ஸ்மிட்டரும் எனப் பல்வேறு சாதனங்கள் இந்த ரோபோ கேமராவில் உள்ளது.
இந்தக் கேமராவை ஸ்மார்ட் போன் மூலமே இயக்கலாம். பூச்சிகள் தங்களின் 10 முதல் 20 சதவீத உடல் சக்தியை மூளை செயல்பாட்டுக்குப் பயன்படுத்துகின்றன. மீதமுள்ள சக்தியை தேவைக்கு ஏற்ப கண்களின் மூலம் பயன்படுத்துகின்றன. அதுவும் தூரத்தின் தேவைக்கு ஏற்ப இந்த சக்தியின் பயன்பாடு அமைகிறது.
இதை அடிப்படையாக வைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் வகையில் சிறிய அளவு பாட்டரி இந்த ரோபோ கேமராவில் இணைக்கப்பட்டுள்ளது.
விடியோவை ஒளிபரப்பும் உலகின் மிகச் சிறிய ரோபோ கேமராவும் இதுதான். கற்கள், மண் போன்றவற்றின் மீது ஏறி அசைந்து கொண்டே செல்லும் வண்டின் மேல் இருந்து அசையாமல் படம் பிடிக்கும் இந்த ரோபோ கேமராவை உருவாக்கிய வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் செயல் வியக்க வைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


