வெளிநாட்டிற்குச் சென்று பணி செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் பலர் இருப்பார்கள். ஆனால், அதற்காக யாரை அணுகுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருப்பார்கள். சிலர் யாரையாவது நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாந்து வெளிநாட்டுக் கனவை நிறைவேற்ற முடியாமல் வேதனையில் மூழ்கியிருப்பார்கள்.
இவர்களுக்கு உதவும்விதமாகதமிழ்நாடு அரசு, ஒரு நிறுவனத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு மனித ஆற்றல் கார்ப்பரேஷன் லிமிடெட்(ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்) என்ற நிறுவனம் வெளிநாடுகளில் சென்று பணியாற்ற விரும்புபவர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
தரமான, தகுதியான, திறன் மிக்க நபர்களைத் தேர்வு செய்து வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதன்மைச் செயலர் அந்தஸ்திலுள்ள ஐஏஎஸ் அதிகாரியைத் தலைவராகவும், 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இயக்குநர்களாகவும் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனத்தின் முக்கிய நோக்கமே, பாதுகாப்பான வெளிநாட்டு வேலை வாய்ப்பினை இந்தியர்
களுக்கு வழங்குவதுதான். அத்துடன் வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல விரும்புவோருக்கு தேவையான சான்றிதழ்கள், படிவங்களை வழங்கி அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் அந்நிறுவனம் வழங்கி வருகிறது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து பெரிய தரவுத்தளத்தையும் நிறுவனம் மேலாண்மை செய்து வருகிறது.
மருத்துவர்,பொறியாளர் முதல் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலாளர்கள் வரை அனைவரின் விவரங்களையும் தொகுத்து வைத்துள்ள நிறுவனம், வெளிநாடுகளில் பணியாளர்கள் தேவை ஏற்படும் பொழுது தரவுத் தளத்திலிருந்து உரிய தகுதிகள் உள்ள நபர்களின் பட்டியலைத் தயார் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறது.
வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவோர் தங்கள் விவரங்களைப் பதிவு செய்வதற்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தில் நுழைந்து தகவல்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பக்கத்திற்குச் சென்று சர்வீஸஸ் என்ற டேப்பை கிளிக் செய்து அதில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
சவுதி அரேபியா, குவைத்,மாலத்தீவு, பங்களாதேஷ், பூடான், பிரான்ஸ், பஹ்ரைன், ஓமன்,கனடா,சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளிலுள்ள பல நிறுவனங்கள், ஓஎம்சி நிறுவனத்தின் வாடிக்கையாளராக உள்ளன.
இணையதளத்தில் கரண்ட் ஓபனிங் என்ற டேப்பை கிளிக் செய்தால் பல்வேறு நாடுகளில் வேலை வாய்ப்பு விவரங்கள் பட்டியலாக வரும். அதன் மூலம் நாம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.omcmanpower.com என்ற இணையதள பக்கத்தை பார்வையிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


