டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாசா அறிவிப்பு: கருவியைக் கண்டுபிடிக்கும் போட்டி!

நிலவிலும், செவ்வாய்க் கிரகத்திலும் தண்ணீரைக் கண்டறிவதற்கான கருவியை உருவாக்கும் போட்டியை பொறியியல் மாணவர்களுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:10 pm

எஸ். ராஜாராம்

நிலவிலும், செவ்வாய்க் கிரகத்திலும் தண்ணீரைக் கண்டறிவதற்கான கருவியை உருவாக்கும் போட்டியை பொறியியல் மாணவர்களுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ளஅறிவிப்பு:

எதிர்காலத்தில் சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் பருகவோ, அக்கிரகங்களில் தாவரங்களை வளர்க்கவோ அல்லது ராக்கெட்டுக்கான உந்து விசையை உருவாக்கவோதண்ணீர் மிக அவசியமானது. ஆனால், பூமியிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்வது என்பது மிகக் கடினமானது; மேலும் செலவு அதிகரிக்கும் விஷயமும் கூட. கடந்த 10 ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்பாக நினைத்ததைவிட சூரிய மண்டலத்தில் தண்ணீர்அதிக அளவில் இருக்கிறது என்பதை இப்போது அறிந்துள்ளோம். அதற்காக தண்ணீரைக் கண்டறியும் ஆய்வு வாகனத்தையும் நாம் அனுப்புகிறோம்.

உதாரணமாக, நிலவின் தென்துருவத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் டன்கள் பனிக்கட்டிபுதைந்திருக்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆனால், அந்தத் தண்ணீர் பூமியில் பயன்படுத்துவது போல இருக்காது. ஆர்டெமிஸ் திட்டத்துக்காக அடுத்த முறை நிலவின் தரைப்பரப்பில் நாம் கண்டறியும் தண்ணீரில் அசுத்தங்கள் கலந்திருக்கும். அதை அருந்தும் முன்னர் அல்லது எரிபொருளாகப் பயன்படுத்தும் முன்னர் அந்த அசுத்தங்கள் நீக்கப்பட வேண்டும். நிலவு அல்லது செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீரை பாதுகாப்பாகச் சேகரிப்பது எவ்வாறு என கற்றுக் கொள்வது என்பது வேற்றுக்கிரக ஆராய்ச்சிக்கு முக்கியமானது. அதனால்தான் 2021 - ஆம் ஆண்டு நிலவிலிருந்து செவ்வாய்க்கிரக பனி மற்றும் எதிர்பார்ப்பு சவால்’ போட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்போட்டியின்படி, இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்கள் கொண்ட அணி, ஒரு ஹார்டுவேரை (வன்பொருள்) வடிவமைத்து உருவாக்க வேண்டும். இந்தக் கருவி மூலம் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறிவது, அடையாளமிடுவது, பல்வேறு மேற்பரப்பு அடுக்குகளைத் துளையிட்டு, பின்னர் பனிக் கட்டியிலிருந்து தண்ணீரை எடுக்க வேண்டும். நிலவு மற்றும் செவ்வாய்கிரகத்திலிருந்து முடிந்தவரை தண்ணீரை எடுப்பதே அணிகளின் பிரதான குறிக்கோளாகஇருக்கும்.

விருப்பமுள்ள அணிகள் தமது கருத்துக்கான வடிவம், செயல்பாடு ஆகியவற்றை விளக்கும் ஒரு திட்ட அறிக்கையை வரும் நவம்பர் 24-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் மாதம் 10 அணிகள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆயிரம் டாலர் மேம்பாட்டு உதவித்தொகை வழங்கப்
படும். இதைத் தொடர்ந்து, அடுத்த 6 மாதங்களில் தமது வடிவமைப்பை உருவாக்க வேண்டும். பின்னர், 2021, ஜூன் மாதம் விர்ஜீனியாவில் உள்ள நாசாவின் லாங்லே ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் 3 நாள் போட்டியில் கலந்து கொண்டு தமது கண்டுபிடிப்பை விளக்க வேண்டும்.

எதிர்கால விண்வெளி மனித ஆராய்ச்சி திட்டங்களில் திறமையான மாணவர்கள் தமது பங்களிப்பை அளிக்க ஆதரவு கொடுக்கும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. போட்டி தொடர்பான முழுமையானதகவல்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இணையதள முகவரி: http://specialedition.rascal.nianet.org

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.