எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இணைய வழிக் கொள்ளை... எச்சரிக்கை!

கரோனா வைரஸ் எப்படி மனிதர்களின் உடல்களில் ஊடுருவி உயிரைப் பிரிக்கிறதோ, அதுபோலதான் இந்த கரோனா முடக்க  காலத்தில் வீட்டிலிருப்பவர்களின் தகவல்களை இணையதளம் மூலம் ஊடுருவி நவீன திருட்டில்

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 3:06 pm


கரோனா வைரஸ் எப்படி மனிதர்களின் உடல்களில் ஊடுருவி உயிரைப் பிரிக்கிறதோ, அதுபோலதான் இந்த கரோனா முடக்க  காலத்தில் வீட்டி
லிருப்பவர்களின் தகவல்களை இணையதளம் மூலம் ஊடுருவி நவீன திருட்டில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

வீட்டில் இருக்கும் கோடிக்கணக்கானோருக்கு முதல் பொழுதுபோக்கு தொலைக்காட்சி, பின்னர்தான் இணையதள விளையாட்டுகள்.   இதை அறிந்த கொள்ளையர்கள் தொலைக்காட்சியில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பும் நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்களை ஒரு மாதம் இலவசமாகக் கண்டுகளியுங்கள் என்ற போலியான  தள்ளுபடிகளை வழங்குகின்றனர். கரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம், ஐ.நா., இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு நிதி உதவி அளிக்கவும் என அந்த அமைப்புகளில் இருந்து அனுப்பப்பட்டதைப்போன்றே போலி மோசடி இ}மெயில்
களும் அனுப்பப்படுகின்றன. இதேபோன்று, மலிவான விலையில் பொருள்களைப் பெறுங்கள் என இ}மெயிலில், வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும்  லிங்கை கிளிக் செய்தால்போதும், உபயோகிப்பாளரின் தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு, டிஜிட்டல் வழியில் பணத்தை இழக்க நேரிடுகிறது.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதற்குப் பிறகு திரைப்படங்களைப் பார்க்க உதவும் சுமார் 700 போலி இணையதளங்களும், கரோனா தொடர்பாக சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களும் தொடங்கப்பட்டு இம்மாதிரியான தகவல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிங்கை கிளிக் செய்தவுடன், மால்வேர்கள் ஒருவரின் ஆன் லைன் வங்கி கணக்கு விவரங்களையும், கிரெடிட் கார்டு தகவல்களையும் திருடுவதற்கு உதவுகிறது.  

மேலும், இந்த வகையிலான இ}மெயில்களில் எது போலி, எது அசல் என கண்டுபிடிப்பது கடினம். ஆகையால், இதுபோன்ற இ}மெயில்களில் வரும் லிங்குகளைக் கிளிக் செய்யாமல், அந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையை அறிய சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்துக்கே சென்று, ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துவிட்டு பின்னர் செயல்பட வேண்டும். சந்தேகத்துக்குறிய இ}மெயில்களில் வரும் லிங்குகளை கிளிக் செய்யக்கூடாது. ஆன்லைன் நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது போன்றவற்றில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 

தற்போது ஊரடங்கு காலம் என்பதால்  ஏமாந்தவர்கள் காவல் நிலையத்தைத் தேடிச் சென்று புகார் அளிக்க மாட்டார்கள் என்று நினைக்கும் மோசடி பேர்வழிகள் விரிக்கும் இணைய வலைகளில் விழுந்துவிடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.