எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கரோனாவிலிருந்து பாதுகாக்கும் "ஆரோக்ய சேது'!

கரோனாவை விட இந்தியாவில்  "ஆரோக்ய சேது'  செயலி  ஸ்மார்ட் போன்களில்  வேகமாகப்  பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 1:55 pm

கரோனாவை விட இந்தியாவில்  "ஆரோக்ய சேது'  செயலி  ஸ்மார்ட் போன்களில்  வேகமாகப்  பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்

களைக் கண்டறியவும், எச்சரிக்கவும் மத்திய அரசால் ஏப்ரல் 2 -ஆம் தேதி  இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. 13 நாள்களில் சுமார் 5 கோடி பேர் இதனைப் பதிவிறக்கம் செய்து, உலகிலேயே குறுகிய நேரத்தில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலியாக சாதனை  படைத்துள்ளது.   "ஆரோக்ய சேது' செயலியின் செயல்பாடுகள் எவை?

இந்த செயலியை பிளே ஸ்டோரிலும், ஆப் ஸ்டோரிலும் சென்று பதிவிறக்கம் செய்ததும், ஒரு முறை பாஸ்வேர்டுடன் உங்கள் பெயரைப் பதிவிட்டு உள்ளே செல்லலாம். ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என 11 மொழிகளில் சேவை வழங்கப்படுகிறது. உங்களின் வயது, இனம், தற்போதைய உடல் நிலை, வெளிநாட்டுப் பயணம், தொழில் போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன. அதன் பின்னர் நீங்கள் பாதுகாப்பான பகுதியில் இருக்கிறீர்களா என்பதை இந்த செயலி சுட்டிக்காட்டும். இதற்கு முக்கியமாக உங்கள் ஸ்மார்ட்போனின் "புளூ டூத், லோகேஷன்' ஆகியவை எப்போதும் இயங்குவதற்கான அனுமதியை இந்த செயலி உங்களிடம் பெற்றுவிடுகிறது. அதன்படி, ஒருவர் வெளியே சென்றால், கரோனா பாதிப்பு பகுதியோ அல்லது பாதிப்புக்கு உள்ளான நபரோ அருகே வரும்போது இந்த செயலி எச்சரிக்கும். அதுமட்டுமன்றி, ஒருவர் வெளியே சென்று வந்த பிறகு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவரது ஸ்மார்ட்போனின் "புளூ டூத்' இயங்கும் தூரத்துக்குள் (சுமார் 10 மீட்டர்) யாரெல்லாம் அருகே வந்தார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தும் மிகப் பெரிய பணியை ஆரோக்ய செயலி செய்கிறது. சர்வர்களில் பதிவாகும் தனிநபர்களின் தகவல்கள் பத்திரமாகக் காக்கப்படும் என்றும் 45 நாட்களுக்கு ஒரு முறை அவை அழிக்கப்படும் எனவும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாட்டில் மாநில வாரியாக எத்தனைபேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற உடனடி தகவல், விரைவில் இ-பாஸ் பெறும் வசதி உள்பட பல்வேறு சேவைகள் ஆரோக்ய சேது செயலியில் வர உள்ளன.

சீனா  "கியூ ஆர் கோடு' உதவியுடனும், தென் கொரியா ஜிபிஎஸ் உதவியுடனும், இஸ்ரேல் செல்லிடப்பேசி உதவியுடனும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்து வருகின்றன. சாதாரண "புளூ டூத்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள "ஆரோக்ய சேது' செயலியின்  சேவை தற்போது  மிக மிக அவசியமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.