எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பொய்ச் செய்திகளைக் கண்டுபிடிக்க புதிய முயற்சி!

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், வீட்டில் முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களின் ஸ்மார்ட் போன்களில் பொய்ச் செய்திகள் அதைவிட வேகமாகப் பரவி வருகின்றன.

News image
Updated On :14 ஏப்ரல் 2020, 7:33 am

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், வீட்டில் முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களின் ஸ்மார்ட் போன்களில் பொய்ச் செய்திகள் அதைவிட வேகமாகப் பரவி வருகின்றன.

இதைத் தடுக்க பலமுறை பகிரப்பட்ட தகவலை ஒரு முறை மட்டும் பகிரும் கட்டுப்பாட்டை வாட்ஸ் ஆப் கொண்டு வந்தது. எனினும்,   பொய்ச் செய்திகள் எவை எனக் கண்டறிவது என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தையும், காவல் துறையையும் கூட இந்த பொய்ச் செய்திகள் விட்டு வைப்பதில்லை. 

அதிலும், முழு ஊரடங்கு உத்தரவு குறித்த அரசு அறிவிப்புகள் சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் பொய்ச் செய்திகளாகவே அதிகமாக உலா வந்த வண்ணம் உள்ளன. இதைத் தடுக்க, மத்திய அரசு வாட்ஸ் ஆப் நிறுவனத்துடன் கைகோர்த்து புதிய வழிமுறையைக் கையாண்டுள்ளது. 

மத்திய அரசின் உத்தரவுகள் தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய இந்திய பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) pibfactcheck@gmail.com என்ற இ-மெயில் முகவரியையும், +918799711259 என்ற வாட்ஸ் ஆப் எண்ணையும் அறிமுகம் செய்துள்ளது. கரோனா தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்புகளை இந்த இ-மெயிலுக்கோ அல்லது வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அனுப்பி உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

இதேபோன்று  https://factcheck.pib.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் இ-மெயிலைப்  பதிவிட்டு உள்ளே நுழைந்து தகவலையோ, செய்திகளையோ, புகைப்படங்களையோ பதிவேற்றம் செய்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளலாம். இதையடுத்து, அந்த செய்தியை "பொய்'   என முத்திரையிட்டு "பிஐபி ஃபேக்ட் செக்' (#PIBFactCheck) வெளியிடும். மத்திய அரசின் இந்த முயற்சி தற்போதைய சூழ்நிலையில் வரவேற்கத்தக்கது.

பொய்ச் செய்திகளைக் கண்டுபிடிக்க வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் கடந்த மக்களவைத் தேர்தலின்போது எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் தற்போது அவை புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.