தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புறப்படுங்கள்... புத்துணர்வோடு!

ஒவ்வொரு நாளும் காலையில் நாம் எழும் போதும், நிதானமாக திட்டமிட்டபடி நாம் நமது அலுவலகப் பணிகளைச் செய்து இனிமையான உணர்வுகளோடு அந்த நாளை கடந்து விட வேண்டும் எனறே நாம் பெரும்பாலும் எண்ணுகிறோம்.

News image
Updated On :8 மே 2018, 12:27 pm

ஒவ்வொரு நாளும் காலையில் நாம் எழும் போதும், நிதானமாக திட்டமிட்டபடி நாம் நமது அலுவலகப் பணிகளைச் செய்து இனிமையான உணர்வுகளோடு அந்த நாளை கடந்து விட வேண்டும் எனறே நாம் பெரும்பாலும் எண்ணுகிறோம்.
ஆனால் பெரும்பாலான நாட்களில் திட்டமிட்டபடி வேலைகளைச் செய்ய முடியாமல் அந்த நாள் ஒரு மோசமான நாளாக ஆகிவிடுகிறது. அனைவருக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கும். 

இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமான பணிச்சுமை, அதிகாரிகளுடன் சரியான தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பது, சக ஊழியர்களின் அரசியல், உடல் நலமின்மை என பல காரணங்கள் அலுவலகப் பணியை மன அழுத்தம் தரும் பணியாக மாற்றிவிடலாம். இவற்றை எப்படித் தவிர்ப்பது?

வேலை தொடர்பான மன அழுத்தம்: மன அழுத்தம் என்பது நம்மை திறமையற்று முடங்கி கிடக்கச் செய்துவிடும். எனவே மன அழுத்தத்தில் இருந்து முதலில் வெளிவந்துவிடுங்கள். புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பணிச்சுமை அதிகமாக இருக்குமானால் அதை குறைப்பதாற்காக நிர்வாகத்துடன் பேசுங்கள். 

அதிகாரிகளுடன் பேசுங்கள்: எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் உங்கள் அதிகாரியுடன் நேரடியாக பேசுங்கள். எப்படி பேச வேண்டும் என்பது குறித்து முன்பாக மனதுக்குள் திட்டமிடுங்கள். உங்கள் தனித்துவத்தையும் பாணியையும் எந்த நிலையிலும் மாற்றாதீர்கள். உங்கள் எண்ணங்களை சுருக்கமாகவும் நேரடியாகவும், தெரியப்படுத்துங்கள் அலுவலக அரசியலைத் தவிர்த்து விடுங்கள்: சக ஊழியர்களின் தேவையற்ற அலுவலக அரசியல் உங்கள் பணித் திறனை பாதிக்கும். எனவே அந்த சூழலில் இருந்து நீங்கள் விலகி இருங்கள். எந்தச் சூழலிலும் ஆத்திரப்படவோ அவசரப்படவோ வேண்டாம். சக ஊழியர்களின் அரசியல் கிசு கிசுக்களில் கலந்துகொள்ளாமல் தனித்து இருங்கள். உங்கள் பணிகளில் மட்டும் முழு கவனத்தை செலுத்துங்கள். 

சொந்த பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்: தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்னைகள் மற்றும் அலுவலகப் பிரச்னைகள் இரண்டையும் சேர்ந்து குழப்பிக் கொள்ளக் கூடாது. இரண்டையும் தனித்தனியாக கையாளத் தெரிய வேண்டும். மனச்சுமை அதிகமாக இருந்தால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் உங்கள் கடமைகளில் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளும். 

உடல் நலனில் அக்கறை: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் நலம் குறைந்தால் மனச்சோர்வு தானாக வந்துவிடும். அது வேலையில் கவனம் செலுத்தவிடாமல் இடையூறு செய்யும். லேசான தலைவலி ஆனாலும் கூட நாம் உடனடியாக சரி செய்துகொள்ள வேண்டும். சரியான முறையில் தூக்கம், ஓய்வு போன்றவை மனதுக்கும் உடல் நலத்துக்கும் தேவையான ஒன்றாகும். நீங்கள் உடல் நலக் குறைவாக உணரும் போது அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. 

நினைவில் கொள்ளுங்கள் ஒரு மோசமான நாளின் பெரும்பாலான சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கின்றன. மோசமான நாள் என்பதில் இருந்து மீண்டுவருவதில் கவனம் செலுத்துங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.