ஃபேஸ் புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் படங்கள், கருத்துகள், வீடியோக்கள் பிடித்திருந்தால் "லைக்' கிளிக் செய்யும் வசதியை அந்த நிறுவனம் 2009ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. லைக்கை கிளிக் செய்துவிட்டால், அந்தப் பயனாளியின் பதிவுக்கு நமது சம்மதம் தெரிவிப்பதற்குச் சமமாகும்.
இதேபோல், பிடிக்காத பதிவுகளுக்கு "டிஸ்லைக்' பொத்தனையையும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளது. ஆனால் இதற்கு முகநூல் நிறுவனம் எந்தவிதமான பதிலையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது.
இந்நிலையில், முகநூலில் ஒருவர் செய்யும் பதிவையோ, படத்தையோ கடுமையாகச் சாடி கருத்துகள் இடம் பெறத் தொடங்கின. இது பயன்பாட்டாளருக்கு சமுதாயத்தில் அவப் பெயரை ஏற்படுத்தியது. இதைத் தடுக்க இப்படிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்கும் நபர்களைத் தேடி தடுத்து நிறுத்தும் அம்சத்தை முகநூல் நிறுவனம் அண்மையில் வழங்கியது.
இதன் அடுத்தகட்டமாக, பதிவாகும் கருத்துகளுக்கு (கமெண்ட்ஸ்) எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், "டவுன்வோட்' என்ற புதிய சேவையை முகநூல் நிறுவனம் தொடங்க உள்ளது. தற்போது கமெண்ட்ஸýக்கு லைக் அல்லது பதில் அனுப்பும் வசதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையின் மூலம் ஒருவரின் பதிவுக்கு வந்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து "டவுன்வோட்' (Downvote) பொத்தானை கிளிக் செய்தால், அந்தக் கருத்து "மனதைப் புண்படுத்துகிறதா? தவறாக வழிநடத்துகிறதா? தலைப்புக்கு சம்பந்தம் இல்லாததா?' என்று கேட்கும். இதில் ஒன்றை கிளிக் செய்துவிட்டால்போதும், அந்த அவதூறு கமெண்ட் மறைக்கப்படும்.
அதேபோல் அந்த கருத்து பிடித்திருந்தால் அதைப் பதிவு செய்ய "அப்வோட்' (upvote) என்ற பொத்தா
னும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் முகநூலில் மேற்கொள்ளப்படும் கருத்து பரிமாற்றம் சிறந்த தரத்தில் இருக்கும் என்று அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது "டவுன்வோட்ஸ்', "அப்வோட்ஸ்' பொத்தான் சேவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது முகநூலில் தெரிவிக்கப்படும் அவதூறு கருத்துகளுக்கு சென்சாராக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


