தண்ணீர் பாட்டில்கள், மனிதர்களின் உயிரைக் குடிக்கும் நச்சுகளாக மாறிவருகின்றன. ஒரு தண்ணீர் பாட்டில் மக்கி அழிய சுமார் 400 ஆண்டுகளாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளில் கடலில் மீன்களின் எண்ணிக்கையைவிட பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு நிலத்தை விட கடலில்தான் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாகக் கொட்டப்படுகின்றன.
ஒரு நொடிக்கு, உலகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள் வாங்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாட்டில் கழிவுகள் அழிவதற்குள் உலகம் நிலைக்குமா என்பது கேள்விகுறியாக உள்ளது. இந்த கேள்விக்கு விடைகாணும் வகையில், அருந்தியதும் அழியும் தண்ணீர் பாட்டிலை ஐஸ்லாந்த் நாட்டைச் சேர்ந்த மாணவர் அரி ஜான்சன் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
அவரது கண்டுபிடிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு அவர் கடற்பாசியை பயன்படுத்தி உள்ளார். இந்த கடற்பாசியை தூளாக்கி தண்ணீரில் கலந்து, பாட்டில் வடிவத்தில் உருவாக்கியுள்ளார்.
இந்த பாட்டிலில் நிறப்பப்பட்ட தண்ணீரை அருந்திய உடனேயே பாட்டிலும் அழிந்துவிடுகிறது. தேவைப்பட்டால் பாட்டிலையும் நாம் சாப்பிட்டுவிடலாம் என்றும் இந்த பாட்டிலில் உள்ள தண்ணீர் பாதுகாப்பானது என்றும் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் மாணவர் அரி ஜான்சன்.
என்னதான் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தாலும், இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும், பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்வதைத் தடுக்காமல் சுற்றுச்சூழலையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


