தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வேலையில்லையா... சில யோசனைகள்!

இன்று பலர் என் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை. என்றோ.. அல்லது இந்த வேலை எனக்குத் தெரியாது, அந்த வேலை எனக்கு ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டு வேலைக்குச் செல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.

News image
Updated On :5 ஜூன் 2018, 10:11 am

இன்று பலர் என் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை. என்றோ.. அல்லது இந்த வேலை எனக்குத் தெரியாது, அந்த வேலை எனக்கு ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டு வேலைக்குச் செல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. வேலைவாய்ப்பின்மையைச் சமாளிக்கவும் வேலை தேடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் சில சிறந்த வழிகள்: 

சுய உதவி பெறலாம்: நீண்ட காலம் வேலை இல்லாமல் இருப்பது உங்கள் சுய மரியாதையைப் பாதிப்பதோடு அது தன்நம்பிக்கையை குறைக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே உரிய நபர்களிடம் சிறந்த ஆலோசனைகளைப் பெறுவதோடு, உள்ளூர் நூலகம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடனான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை நீங்கள் பெறக்கூடும். 

வேலைக்கான உதவியைப் பெறுங்கள்: தற்போதைய தேடல் வெற்றியடையவில்லை என்றால் புதிய வாய்ப்புகளுக்கு பொருத்தமாக உங்கள் விண்ணப்பத்தை மாற்றிக் கொள்ளலாம். வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்றவாறு தகுதியை, தனித்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பைப் பெறுவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அனுபவங்களை ஏற்படுத்திக் கொள்வதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். 

பிற வேலைவாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுங்கள்: உங்கள் முந்தைய வேலையின் ஊதியத்தை விட குறைந்த ஊதியத்தில் வேறு ஒரு வேலையை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். எனினும் பகுதி நேர வேலை மற்றும் சில ஒப்பந்தப் பணிகளைச் செய்வதால் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் உங்கள் தொலைபேசிக் கட்டணம், புதிய வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியும். 

விரும்பிய நிறுவனத்தை நோக்கிச் செல்லுங்கள்: ஏதேனும் ஒரு நிறுவனத்தின் மீது உங்களுக்கு ஆர்வமோ, அல்லது பெரும் மதிப்போ இருக்குமானால் அந்த நிறுவனத்தில் கடைநிலைப் பணியானாலும் ஏற்றுக் கொண்டு நிறுவனத்தோடு உங்களை இணைத்துக் கொள்வது நல்லது. பின்னர் உங்கள் திறமையை, நேர்மையைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தில் உயர் பதவியை அடையும் வாய்ப்பை உருவாக்கலாம். 

நேர்காணலுக்கான திறன்களை வளர்த்தல்: நேர்காணலின் போது உங்களுக்கு அதிக நம்பிக்கை, தைரியம் தேவைப்படலாம் அல்லது ஒரு நிர்வாக உதவியாளராக சிறந்த தொழில்நுட்ப திறன்கள் தேவைப்படலாம். இணைய
தளம் மற்றும் உள்ளூர் பயிற்சி மையங்கள் இதற்கான வகுப்புகளை நடத்துகின்றன. அதன்மூலம் திறனை வளர்த்துக் கொண்டு தகுந்த வேலையை அமைத்துக் கொள்ளுங்கள். 

வேலை என்பது ஊதியத்துக்கானது மட்டுமல்ல. நம்மை நமக்கும் பிறருக்கும் அடையாளப்படுத்துவதும் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.