எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்குப் பணி

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கு

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:42 am

ஆர். வெங்கடேசன்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். ததஇ 01/2015 தேதி: 22.08. 2015

பணி: Sportspersons Against Sports Quota2015-16)

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதிகள்: சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் உலக அளவில் போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகள், ஆசிய அளவிலான போட்டிகள், காமன் வெல்த் போட்டிகள், பல்கலைக்கழங்களுக்கிடையே நடைபெறும் போட்டிகள் ஆகியவற்றில் பங்குபெற்று விளையாடி குறைந்தது 3 ஆம் இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

01.04.2013 ஆம் தேதிக்கு பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப் படும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டுத் திறமையைப் பரிசோதிக்கும் மாதிரி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதனை The  Assistant Personnel Officer, Railway RecruitmentCell, Chennai என்ற பெயருக்கு இந்தியன் போஸ்டல் ஆர்டராக ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.09.2015

மேலும் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, விளையாட்டு பிரிவு வாரியான காலியிடங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rrcmas.in என்ற  இணையதளத்தை பார்க்கவும்.

தொகுப்பு:

ஆர். வெங்கடேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.