அரசு பொதுத்தேர்வு எழுத ரேஷன்கார்டு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைக் குறைக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைக் குறைக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களோடு பல்வேறு ஆவணங்களும் இணைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன.
மாணவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும்போது தவறு நடக்காமல் இருக்க அனைத்து மாணவர்களும் தங்களது ரேஷன் கார்டு நகலை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு எண், மாணவர்களின் பிற விவரங்களோடு கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்படும்.
தேர்வு முடிந்ததும், அந்த எண்ணை வருவாய்த்துறைக்கு அனுப்பி சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று போன்ற ஆவணங்களை பள்ளியே பெற்றுத் தரும்.
மேலும், தேர்வு முடிவு வந்த பிறகு ரேஷன் கார்டு எண்ணை வைத்தே வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ள முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...