மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கண்காணிப்பு... ஜாக்கிரதை!

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் அதை எதிர்கொள்ள புதுப்புது விதங்களில் கண்காணிப்புச் சாதனங்கள் சந்தைக்கு வந்துவிட்டன.

News image
Updated On :20 அக்டோபர் 2015, 9:46 am

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் அதை எதிர்கொள்ள புதுப்புது விதங்களில் கண்காணிப்புச் சாதனங்கள் சந்தைக்கு வந்துவிட்டன. இதனால், ஹோட்டல், விருந்துக் கூடங்கள், அலுவலகங்கள் உள்பட பல இடங்களிலும் கண்காணிப்பு சாதனங்களைப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

கண்காணிப்பு கேமராக்களை பார்வையில் தெரியும்படி பொருத்துவது ஒரு நடைமுறை என்றால், பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரியாமல், அழகு சாதனப் பொருள்கள் போல உளவு கேமராக்கள் வைக்கப்படுவதும் ஒருபக்கம் இருந்து வருகிறது. இதனால், உளவு கேமராக்கள் பலவிதமான வடிவகங்களில் சந்தைக்கு வந்துவிட்டன என்பதை தில்லியில் அக்டோபர் 8 முதல் 11 வரை நடைபெற்ற 18-ஆவது இந்திய சர்வதேச பாதுகாப்புக் கண்காட்சியில் காண முடிந்தது.

கையடக்கமாகவும், அழைப்புமணி போலவும், மின்சார மீட்டர் கருவி போலவும் பார்வைக்குத் தென்படும் இக்கேமராவின் பெயர் டிராஃபி கேம் ஹெச்டி.

வீட்டின் சுவர்களில் இவற்றைப் பொருத்திவிட்டால் போதும். 40 அடி தூரத்தில் யாரேனும் வந்தால், கேமராவில் பொருத்தப்பட்டுள்ள சென்ஸôர் உடனடியாகச் சமிக்ஞை அளித்துவிடும். இதையடுத்து, வீடியோ பதிவு தானாகவே தொடங்கிவிடும். 32 ஜிபி வரை நினைவகத் திறனும் உள்ள இக்கேமரா, தொடர்ந்து 6 மாதங்கள் இருட்டிலும், பகலிலும் ஒளி, ஒலிப்பதிவு செய்யும் திறன் கொண்டது. அமெரிக்கத் தயாரிப்பான இக்கேமராவின் விலை ரூ.25 ஆயிரம். இந்தக் கேமராவில் சாதாரண பேட்டரிகளைப் பயன்படுத்தும் வசதி உள்ளது சிறப்பம்சம்.

அதேபோல, டார்ச் லைட்டை இருட்டில் பயன்படுத்தும் ஒரு சாதனம் என்றுதான் நம்மில் பலரும் நினைப்போம். ஆனால், டார்ச் லைட்டில் லேசர் லைட், புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது ஆகியவை இருப்பது நம்மில் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அந்தக் கருவியும் சந்தையில் விலைக்கு வந்துள்ளதை இக்கண்காட்சியில் அறிய முடிந்தது. 32 ஜிபி நினைவுத் திறன், லேசர் ஒளி, வீடியோ, புகைப்பட வசதி அடங்கிய டார்ச் லைட்டின் விலை ரூ.15 ஆயிரம். சரி, என்ன இவ்வளவு விலை அதிகமாக இருக்கிறதே என்று கேட்கிறீர்களா? அமெரிக்க தயாரிப்பல்லவா, அப்படித்தான் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.