திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வந்தாச்சு விடியோ "ரெஸியூம்'!

வேலை தேடும் இளைஞர்களுக்கு அடையாள அட்டையாக விளங்குவது சுயவிவரக் குறிப்பு எனப்படும் "ரெஸியூம்'. சுயவிவரக் குறிப்பை தயார் செய்வதைப் பொறுத்து ஒருவரின் திறமையை மதிப்பிட முடியும். ÷வேலை கிடைப்பதைவிட சுயவிவர

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:03 pm

உமாகல்யாணி

வேலை தேடும் இளைஞர்களுக்கு அடையாள அட்டையாக விளங்குவது சுயவிவரக் குறிப்பு எனப்படும் "ரெஸியூம்'. சுயவிவரக் குறிப்பை தயார் செய்வதைப் பொறுத்து ஒருவரின் திறமையை மதிப்பிட முடியும்.

÷வேலை கிடைப்பதைவிட சுயவிவரக் குறிப்பை கச்சிதமாக தயார் செய்வது கடினமான ஒன்று. இதற்கு பல்வேறு சுயவிவரக் குறிப்புகளை ஒப்பிட்டு, தங்கள் விவரங்களை தயாரிப்பவர்களும் உண்டு.

 இது ஒரு புறமிருக்க சுய விவரக்குறிப்பை தயாரிக்கும்போது தங்களைக் குறித்த விவரங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கூறி, பின் சான்றிதழ்களை வரிசைப்படுத்துவதற்குள், "அப்பாடா' என்று ஆகிவிடும்.

 விடியோ ரெஸியூம்... இந்த சுமையைக் குறைப்பதற்கு சென்னையைச் சேர்ந்த சி2சி மேலாண்மை சேவை நிறுவனம், நாட்டிலேயே முதன்முறையாக விடியோ மூலம் சுயவிவரக் குறிப்பைத் தயாரித்து அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

 இணையதளத்தில்... வேலை தேடும் இளைஞர்கள் www.videoresume.com என்ற இணையதளத்துக்குச் சென்று, அதில் கூறப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றி தங்களுக்கான விடியோ சுயவிவரக் குறிப்பைத் தயார் செய்து கொள்ளலாம். இதை சேமித்து வைப்பதற்கான மதக முகவரியையும், அந்நிறுவனமே கொடுத்துவிடுகிறது.

 எப்படி?... இதன் மூலம் இளைஞர்கள் தங்களின் திறமை, தனித்துவம், பணி அனுபவம், தொடர்பு கொள்ளும் திறன் உள்ளிட்டவற்றை தாங்களாகவே திரையில் தோன்றி தெரிவிக்கலாம். இதற்கு இணையதள இணைப்பு, "வெப்-கேமிரா' வசதியுடன் கூடிய ஒரு கம்ப்யூட்டர் இருந்தால் மட்டுமே போதும்.

 நேர்காணலுக்குச் செல்லும்போது, அதை எடுத்துக் கொண்டோமா? இதை விட்டுவிட்டோமா? என்று பதட்டப்படாமல் செல்லலாம். நேர்காணலில் தங்களுக்கென்று கொடுக்கப்படும் மதக  முகவரியை தெரிவித்தால் போதும். நேர்காணல் நடத்தும் அதிகாரிகள் அதைப் பயன்படுத்தி உங்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்.

பிறகென்ன? இனி காகித சுயவிவரக் குறிப்பை விட்டுத் தள்ளுங்கள். விடியோ சுயவிவரக் குறிப்பை பயன்படுத்தி உங்கள் போட்டியாளர்களை அட்டகாசமாக அசத்திக் காட்டுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.