ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பழசு என்றும் புதுசு...

இந்தியர்கள் இனிப்பு இல்லாமல் எந்த சுப நிகழ்ச்சியையும் நடத்தமாட்டார்கள்.

Published On :10 மே 2026, 4:01 am IST

இந்தியர்கள் இனிப்பு இல்லாமல் எந்த சுப நிகழ்ச்சியையும் நடத்தமாட்டார்கள். தீபாவளி என்றால் பல இனிப்பு வகைகள், பொங்கல் என்றால் சர்க்கரைப் பொங்கல், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் என்றால் ஒரு பாயசமாவது இருக்கும்.

வட நாட்டினர் நம்மைவிட அதிக இனிப்பு பிரியர்கள். வங்காளிகளுக்கு இனிப்பு இல்லாமல் சாப்பாடே முடியாது.

தமிழ்நாட்டில், 'பழனி போனால் பஞ்சாமிர்தம் வாங்கினீர்களா? ஸ்ரீவில்லிபுத்தூர் போனால் பால்கோவா வாங்கினீர்களா?' எனக் கேட்பர்.

வட நாட்டில் பெரிய நகரங்களில் காரத்தைவிட இனிப்புக்கடைகளே அதிகம்.

சரி, இனி ஒரு கேள்வி... இந்தியாவிலேயே மிக பழமையான இனிப்புக் கடை எங்குள்ளது தெரியுமா?

பேடாவுக்கு பிரபலமான ஆக்ராவில் தான் இந்தக் கடை உள்ளது. இதன்பெயர் பகத் ஹல்வாய் கடை.

இது 1795-ஆம் ஆண்டிலிருந்தே இயங்கி வருகிறது. நீண்ட கால நற்பெயரே இது தொடர்ந்து இயங்குவதற்கு முக்கியக் காரணமாம்.

இந்தக் கடை பழங்கால மிட்டாய் தயாரிப்புகளுக்கும், பாரம்பரிய வட இந்திய இனிப்புகளுக்கும் பிரபலம். இங்கு கட்டாயம் சுவைக்க வேண்டிய இனிப்புகள் பேடா, லட்டு, பஃர்பி, தேசி நெய் இனிப்புகள்.

ஆக்ராவில் அவர்களுக்கு மூன்று கடைகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.