மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோலிவுட் ஸ்டூடியோ!

சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்லூரியின் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2026, 10:33 pm

சௌந்தர்யா பயோபிக்கில் பிரியங்கா மோகன்!

சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்லூரியின் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர்கள் தனுஷ், பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதில் தனுஷ், 'வடசென்னை 2' படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன், நடிகை செளந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை எனவும் தெரிவித்திருக்கிறார்.

நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், 'நான் கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும் கிடையாது; லாஸ்ட் பெஞ்சும் கிடையாது. தேவைப்படும் சமயத்தில் மாறி உட்கார்ந்துகொள்வேன். கலாசார நிகழ்வுகளில் நான் பெர்ஃபார்ம் செய்திருக்கிறேன். அதே சமயம் மாணவர்களுடன் நின்று கொண்டாடவும் செய்திருக்கிறேன்' என்றார்.

அவரிடம், 'யாருடைய பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது?' எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் தந்தவர், 'நடிகை செளந்தர்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பயோபிக் படத்தில் நடிக்க ஆசை!' என்றார்.

பிரியங்கா மோகன் நடித்திருக்கும் 'மேட் இன் கொரியா' திரைப்படம் வருகிற மார்ச் 12-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. 'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய இயக்குநர் ரா. கார்த்திக் இப்படத்தை இயக்கிவிருக்கிறார்.

Story image

மீரா கதிரவனின் ஹபீபி!

'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களை இயக்கிய மீரா கதிரவன், அடுத்து புதுமுகங்கள் நடித்துள்ள 'ஹபீபி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமியக் குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது, 'அரபுச் சொல்லான ஹபீபிக்கு தமிழில் 'என்அன்பே' என்று அர்த்தம். இப்படி ஒரு படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தியமாகியிருக்கிறது. நமது ஆரவாரமான பேச்சுகளை ஓதுக்கிவைத்துவிட்டு, சகமனிதனின் தோளில் கைகளைப் போட்டவாறு மனங்களைப் பற்றி பேசவேண்டிய நேரமிது.

மனிதத்தையும் அன்பையும் சக மனிதன் மீதான சகிப்புத்தன்மையையும் பேசவேண்டிய தேவையுள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை பற்றிய படமாக இது இருந்தாலும், எல்லா மக்களையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும். இதன் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை ஒன்றும் பின்னப்பட்டுள்ளது.

இப்படத்தைக் காணும் அனைவரும் அதை தங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி தங்களையே பார்த்துக் கொள்வதாக இருக்கும். அந்த வகையில் சர்வதேச அளவில் வியாபார ரீதியாகவும் இந்தப் படம் சென்று சேரும் என்பதால், இப்படத்துக்கு 'ஹபீபி' என டைட்டில் வைத்துள்ளோம்.

திரைக்கதை எழுதும்போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன். அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி, இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும்.

நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றது. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால், அதைவிடக் கொடுப்பினை வேறு இல்லை!' என்றார்.

Story image

ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பும் ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா தம்பதி!

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த மாதம் 26- ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் தெலுங்கு மற்றும் கன்னட முறைப்படி பிரமாண்டமாக நடைபெற்றது.

புதுமணத் தம்பதியர் தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களோடு சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் லாரிகளில் ஹைதராபாத், மும்பை, சென்னை, தில்லி, பெங்களூரு, அகமதாபாத் போன்ற 22 நகரங்களில் உள்ள தங்கள் ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர்.

இது தொடர்பாக இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த நாட்டின் அழகான மக்களாகிய நீங்கள் எப்போதும் எங்கள் பயணங்களிலும், எங்கள் அன்பிலும் ஓர் அங்கமாக இருந்து வருகிறீர்கள். எங்கள் திருமணத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவது எங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும். இந்தியா எதையுமே இனிப்புகளுடனும் உணவுகளுடனும்தான் கொண்டாடும்.

எனவே, மார்ச் 1-ஆம் தேதி, எங்கள் வாழ்வின் இந்தப் பெரிய தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக, நாடு முழுவதும் அன்பு மற்றும் இனிப்புகள் நிறைந்த லாரிகளை நாங்கள் அனுப்பி வைக்கிறோம். மேலும், நாடு முழுவதும் உள்ள பல கோயில்களில் அன்னதானம் வழங்கவும் உள்ளோம். உங்கள் அனைவரின் ஆசிகளையும் நாடுகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.