ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உயரமான ரயில் நிலையம்

இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் உள்ள கூம் ரயில் நிலையம்தான் உலகில் மிக உயரமான ரயில் நிலையம் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Published On :21 ஜூன் 2026, 4:24 pm IST

இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் உள்ள கூம் ரயில் நிலையம்தான் உலகில் மிக உயரமான ரயில் நிலையம் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள மிக உயரத்தில் இடம் பெற்றுள்ள ரயில் நிலையம் அது அல்ல.

சீனாவையும் திபெத் தலைநகர் லாசாவையும் இணைக்கும், கீங்காய்-திபெத் ரயில் பாதையில் உள்ள 'தங்குல்லா' ரயில் நிலையம் தான் உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ரயில் நிலையம்.

திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஆம்டோ கவுன்டியில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5068 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இங்கு ரயில் நிற்பதில்லை. ஊழியர்களும் கிடையாது.

ஏன்?

இங்கு கடுமையான வானிலை நிலவுவதால் தீவிர ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். எனவே பயணிகள் இறங்க அனுமதியில்லை. வழக்கமான பயணிகள் சேவை இல்லாத ஆளில்லா ரயில் நிலையம்.

இங்கு மூன்று இருப்புப் பாதை உள்ளது. அவசர கால நிறுத்தம் மற்றும் சைடிங்குக்கு மட்டுமே அவை பயன்படுத்தப்படும்.

கிங்காய்- திபெத் ரயில் பயணம் மலைகளுக்கு மேலே செல்வதால் பார்க்க மிக அழகாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.