ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான கிரிக்கெட் திடல்!

லடாக்கில் உலகின் மிக உயரமான கிரிக்கெட் திடல் அமையவிருப்பது பற்றி...

ladakh

லடாக் (கோப்புப்படம்) - ANI

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:28 pm IST

லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான கிரிக்கெட் திடலை அமைக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லடாக் பிரதேசத்தின் லேவுக்கு 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திக்ஸி என்ற பகுதியில் கிரிக்கெட் திடலை அமைப்பது தொடர்பான முதல்கட்ட ஆய்வுகளை லடாக் நிர்வாகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம் நிறைவடைந்தால் உலகின் மிக உயரமான கிரிக்கெட் திடன் என்ற சாதனையைப் படைக்கும். தற்போது உலகின் உயரமான திடலாக, கடல் மட்டத்தில் இருந்து 2,444 மீட்டர் (8,018 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஹிமாசலின் சைல் கிரிக்கெட் திடல் உள்ளது.

லடாக் கிரிக்கெட் திடலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திடல் ரூ. 100 முதல் 116 கோடி மதிப்பீட்டில் 40,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச தரநிலைக்கு ஏற்பவும், லடாக்கின் தட்பவெப்பநிலை மற்றும் மலைப்பகுதிகளுக்கே உரிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இங்குச் சிறப்புப் பொறியியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

லடாக் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், அப்பகுதியில் உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாக பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் திடலானது 1.32 லட்சம் பேர் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய திடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

India Plans World's Highest Cricket Stadium in Ladakh at 11,800 Feet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.