ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாம்பழத்துக்கும் அப்பால்...

மும்பை-கோவா பாதையில் உள்ள முக்கிய ரயில் நிறுத்தம் ரத்தினகிரி.

Published On :14 ஜூன் 2026, 4:05 am IST

மும்பை-கோவா பாதையில் உள்ள முக்கிய ரயில் நிறுத்தம் ரத்தினகிரி. மகாராஷ்டிராவின் தென்மேற்குப் பகுதியில் அரபிக் கடலை ஒட்டிய இயற்கை எழில் கொஞ்சும் துறைமுக நகரம்.

ரத்தினகிரி என்றாலே அல்போன்சா மாம்பழம் ஞாபகத்துக்கு வரும். ஹாபஸ் வெரைட்டி மாம்பழங்களுக்கும் பிரபலம். இதுதவிர பல அற்புத இடங்களையும் கொண்டது ரத்தினகிரி. அவற்றில் சில...

ஆரேவாரே கடற்கரை:

கண்கவர் காட்சிகளை வழங்கும் இந்த இரட்டைக் கடற்கரைஅமைதியான சூழலை விரும்பிச்செல்பவர்களுக்கு அற்புதமான இடம்.

திபாபாய் அரண்மனை

திபாபாய் அரண்மனை

திபாபாய் அரண்மனை:

இது இந்தியா, மியான்மர் வரலாற்றின் ஒரு முக்கிய, எதிர்பாராத திருப்பத்தை நினைவுபடுத்துகிறது. 1910-இல் கட்டப்பட்டது இந்த செங்கல் கட்டடம்.

ஆங்கிலேய அரசால் மியான்மர் கடைசி மன்னர் தி பால் மின் நாடு கடத்தப்பட்டு இங்கு சிறைவைக்கப்பட்டார். சீரான வடிவமைப்பு, மியான்மர் பக்கோடா பாணி கூரைகளால் தனித்துவமாக இது விளங்குகிறது. இதனுள் தொல்பொருள்அருங்காட்சியகமும் உள்ளது.

பகவதி கோட்டை அல்லது ரத்னதுர்கா கோட்டை

பகவதி கோட்டை அல்லது ரத்னதுர்கா கோட்டை

பகவதி கோட்டை அல்லது ரத்னதுர்கா கோட்டை:

கம்பீரமான குதிரைலாட வடிவிலான இந்தக் கோட்டையை மூன்று பக்கமும் அரபிக்கடல் சூழ்ந்துள்ளது. இங்கிருந்து அழகான காட்சிகளைக் காணலாம். 12-ஆம் நூற்றாண்டின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை. அதனுள் பகவதி கோயில் உள்ளது.

ஜெய்கட் கோட்டை

ஜெய்கட் கோட்டை

ஜெய்கட் கோட்டை:

சாஸ்திரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஜெய்கட்கோட்டை அமைந்துள்ளது. 16-ஆம்நூற்றாண்டில் கட்டப்பட்டது. கரடுமுரடான பாறைச் சரிவிலிருந்து முகத்துவாரத்தைப் பார்த்தவாறு அமைந்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் நினைவு இல்லம்: திலக்அலி -கொங்கணி பாணியில் அமைந்த அருமையான அருங்காட்சியகமாக உள்ளது. இது இப்போது தேசிய நினைவுச்சின்ன அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

கணபதி புலே:

ஒரேகல்லில் செதுக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான சுயம்பு கணேச சிலை உள்ளது. ரத்தினகிரி பயணம் இந்த கணபதியை பார்க்காமல் நிறைவடையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.