ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாழ்வின் கடினமான கட்டத்தைக் கடந்தேன்!

நடிகர் அமிதாப் பச்சன் ஜூலை 20, 21-ஆம் தேதிகளில் வெளியிட்ட தனது சமூக ஊடகப் பதிவுகளில், தான் மருத்துவமனையில் இருந்ததாகவும், வாழ்வின் கடினமான கட்டத்தைக் கடந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன்

Published On :26 ஜூலை 2026, 4:06 am IST

நடிகர் அமிதாப் பச்சன் ஜூலை 20, 21-ஆம் தேதிகளில் வெளியிட்ட தனது சமூக ஊடகப் பதிவுகளில், தான் மருத்துவமனையில் இருந்ததாகவும், வாழ்வின் கடினமான கட்டத்தைக் கடந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தனக்கு என்ன நேர்ந்தது? எதற்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது? என்பதையெல்லாம் விவரிக்கவில்லை.

'மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தேன். திறமைமிக்க மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினேன். வீடு திரும்பிய இந்தக் காலகட்டம் மிகவும் கடினமானது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் நீங்கள் போற்றப்படும் ஜாம்பவானாக இருக்கிறீர்கள். ஒரு நாள் தோல்வி உங்களை வெல்கிறது.

இதுதான் உங்கள் வாழ்க்கையின் மிகவும் கடினமான கட்டம். சிலர் எதிர்கொள்கிறார்கள். சிலர் வீழ்ந்து விடுகிறார்கள். முயன்று எதிர்கொள்கிறவர்கள். ஜாம்பவான்களாகத் தொடர்கிறார்கள். முடியாதவர்கள் சமரசமாகி, வாழ்வைத் தொடர்கிறார்கள், கடந்தகால புகழில் தங்கி விடுகிறார்கள். இந்தத் தேர்வு தனிநபரை தீர்மானிக்கிறது. இரண்டுமே தவறில்லை. நன்றாக இரு! மகிழ்வாக இரு!' என்று அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப் பல முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நலமடைந்து வீடு திரும்பியவர். ஒவ்வொரு முறையும் புத்தொளியுடன் அவர் தோன்றி வந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.