ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மண்ணைத் தின்னும் மனிதர்கள்

'நீ திங்கிற சோற்றுல மண்ணையா அள்ளி வச்சேன்?' என்று கிராமங்களில் பேச்சு வழக்கு உண்டு.

Published On :9 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

'நீ திங்கிற சோற்றுல மண்ணையா அள்ளி வச்சேன்?' என்று கிராமங்களில் பேச்சு வழக்கு உண்டு. இறைவனுக்கு முன்பு மனிதர்கள் நேர்த்திக்கடன் செய்வதில், மண்சோறு சாப்பிடுதல் ஒன்றாகும். ஆனால், உண்மையில் மண் ரொட்டி, மண் பிஸ்கட் போன்றவற்றை ஒரு நாட்டில் உண்கின்றனர். உணவுப்

பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக, லத்தீன் அமெரிக்காவில் பெரிய கரீபியன் தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைதி எனும் நாட்டில்தான் இந்த நிலை இருக்கிறது.

உலகில் காபி உற்பத்தி அதிக அளவில் இருந்த ஹைதி, தற்போது மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகிவிட்டது. இங்கு உணவுக்கான வளங்கள் மிகவும் குறைவாக உள்ளன. மக்களால் கால்நடைகளை வளர்க்கவோ, விவசாயம் செய்யவோ இயலாத சூழல் உள்ளது.

மக்கள் மிக மோசமான நிலையில் வாழ்ந்து வருவதால், போதுமான அரிசி அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தங்கள் வாழ்நாளில் ஒரு வாய் அரிசி உணவைக் கூட பலரால் உட்கொள்ள முடிவதில்லை. இதனால் இவர்கள் 'போன்

போன் தே' (மண் சர்க்கரை) என்ற சேற்று பிஸ்கட்டுகளை உண்கிறார்கள். இது மிகவும் சொரசொரப்பாக, வாயில் ஜல்லிக்கற்களை மெல்லுவது போன்ற உணர்வைத் தருவதாக இருந்தாலும் தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது.

Story image

களிமண் பிஸ்கட்:

பசியைப் போக்கிக் கொள்ள மக்கள் களிமண் பிஸ்கட்டுகளையே முக்கிய உணவாகக் கொள்கிறார்கள். களிமண் கூழ் போன்ற பதத்தை அடையும் வரை அதில் தண்ணீர் சேர்க்கிறார்கள். பின்னர் அதில் உள்ள குச்சிகள், கற்கள், செத்துப்போன பூச்சிகள் போன்ற அசுத்தங்களை நீக்க அந்தக் கலவையைத் துணியால் வடிகட்டுகிறார்கள். அதனுடன் சிறிது உப்பும், காய்கறிகளையும், கொழுப்புக்காக ஒருசில முட்டைகளையும் சேர்க்கிறார்கள்.

கலவையைச் சிறிய வில்லைகளாக வடிவமைத்து, அவை உலர்ந்து கெட்டியாவதற்காக வெயிலில் காய வைக்கப்படுகின்றன. இதைச் சாப்பிடுவதால் வயிற்று வலி, செரிமானக் கோளாறு போன்ற பல பிரச்னைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

ஹைதி அரசு மிகவும் ஊழல் மலிந்ததாக இருப்பதால், வெளியிலிருந்து வரும் நன்கொடைகளும் உதவிகளும் ஏழை மக்களுக்குச் சென்றடைவதில் சிரமம் ஏற்படுகிறது. ஏழைகளால் சுயசார்புடன் வாழ முடியாததால், ஒட்டுமொத்த சமூகமும் குழப்பமான நிலையில் உள்ளது. அரசுத் துறையினர் நாட்டின் நிதியை முறைகேடாகச் சுருட்டியுள்ளனர்.

ஹைதிக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய நிதியுதவியையும்கூட அரசுத் துறையினர் முறைகேடாகக் கையாண்டனர். ஆனாலும் அரசுத் துறையினர் தங்கள் வீடுகளில் ஆடம்பரமான, ஒழுக்கக் கேடான வாழ்க்கையை வாழ்ந்து வருவதோடு, ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொள்கின்றனர்.

ஆப்பிரிக்காவின் நிலைமை: ஆப்பிரிக்காவில் வறுமை நாடுகளின் நிலை வேறுவிதமாகக் கையாளப்படுகிறது.

நமீபியாவில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு இறைச்சியை விநியோகிப்பதற்காக, யானைகள் உள்பட வன விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன என அந்த நாட்டின் சுற்றுச்சூழல், வனவியல் மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்தது.

எல்நினோ போன்ற காலநிலை மாற்றம், வறட்சி, பஞ்சம், இயற்கை வளங்கள் கிடைத்தல் போன்றவற்றுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் 200 யானைகளைக் கொல்லத் திட்டமிட்டு, அதன் இறைச்சியை உலர்த்திப் பொட்டலங்களாக மாற்றி, புரதச்சத்து தேவைப்படும் சமூகங்களுக்கு விநியோகிக்க ஜிம்பாப்வே அரசு திட்டமிட்டது.

உண்பதற்கு உணவின்றி உலகத்தில் இவ்வளவு அவலங்கள் நிறைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.