புனித நூலான திருக்குரான் 30 ஜூஸ்வு பிரிவுகளாக, 114 அத்தியாயங்களில் 6,666 புனித வசனங்களில் மனிதர்களுக்கு அறநெறியைக் கற்பிக்கின்றன. அரபி மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பல நூறாண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் முஸ்லிம்களின் இல்லங்களில் குடிகொண்டுள்ளது.
உள்ளங்கைக்குள் அடங்கும் வகையில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் தோலில் மூடப்பட்ட உறையுடன் கூடிய அபூர்வமான சிறிய திருக்குரான் நூலை
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியைச் சேர்ந்த அறுபது வயதான வணிகர் சித்திக் அலியின் குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.
அவரிடம் பேசியபோது:
'எனது முன்னோரான முகம்மது மதார் சாஹிப், கரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜமீன் ஆத்தூரை பூர்விகமாகக் கொண்டவர். இவர் 150 ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்களின் புனிதத் தலமான மெக்காவுக்குக் கப்பலில் சென்றார்.
அப்போது அங்கு 5 செ.மீ. அகலத்திலும், 8 செ.மீ. நீளத்திலும் விற்பனை செய்யப்பட்ட மிகச் சிறிய அளவில் நுணுக்கமான பூ வேலைப்பாடுகள் கொண்ட தோல் உறையால் மூடப்பட்ட அபூர்வமான திருக்குரான் நூலை வாங்கி வந்தார்.
கப்பலில் செல்லும்போது திசையை அறிந்து தொழுவதற்காக வெள்ளியில் தயாரிக்கப்பட்ட ஒரு நாணயத்தின் அளவில் வட்டவடிவத்தில் மிகச் சிறிய திசைக்காட்டும் கருவியையும் வாங்கி வந்தார். மேலும், அவர் வெளிநாட்டுப் பயணத்தின்போது பல்வேறு நாடுகளின் நாணங்கள் மற்றும் பணத்தாள்களையும் வாங்கி வந்தார். இவற்றை அவர் தனது மகன் அப்துல்ரபியிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளார்.
இவற்றை நாங்கள் மூத்தோரை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னமாகக் கருதி இன்றளவும் பாதுகாத்து வருகிறோம்' என்கிறார் சித்திக் அலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவில் வந்தார் பிரதமர் மோடி!

துணை ராணுவத்தில் 223 தலைமை காவலர் பணியிடங்கள்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கந்தா்வகோட்டையில் நெற்பயிா்களை காக்க தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

கடன் வாங்கி வேட்புமனு தாக்கல்: சுயேச்சை வேட்பாளா் நூதன பிரசாரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

