என் குழந்தையை அம்மாதான் வளர்த்தார்
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு என்னை விருது பெற அழைத்திருந்தார்கள். பெரிய அரண்மனைகளும்கூட ராஷ்டிரபதி பவனுக்கு நிகராகாது.
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு என்னை விருது பெற அழைத்திருந்தார்கள். பெரிய அரண்மனைகளும்கூட ராஷ்டிரபதி பவனுக்கு நிகராகாது.
By பிஸ்மி பரிணாமன்
Vishwanathan
'தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு என்னை விருது பெற அழைத்திருந்தார்கள். பெரிய அரண்மனைகளும்கூட ராஷ்டிரபதி பவனுக்கு நிகராகாது. அத்தனை பிரமாண்டம். என்னை என் குடும்பத்தினருடன், ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் தங்க வைத்தார்கள். விருதைப் பெற்றபோது, நான் சிலிர்த்துப்போய், 'சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண் குடியரசுத் தலைவர் மாளிகையிலா...' என்று நம்பமுடியவில்லை.
நான் மயக்கம் அடைந்துவிடுவேனோ? என்று பயந்தேன். செவிலியராகப் பணியாற்ற வாய்ப்பளித்த தமிழ்நாடு அரசுக்கும், என்னை ஊக்கப்படுத்திய அனைத்து மருத்துவர்களுக்கும், ஒத்துழைத்த என் சக செவிலியர்களுக்கும், என் பெற்றோர், குடும்பத்தினருக்கும் எனது விருதைச் சமர்ப்பணம் செய்தேன்'' என்கிறார் அலமேலு மங்கையர்க்கரசி.
ஆண்டுதோறும், சேவை மனப்பான்மையுடன் செயல்படும் 15 செவிலியர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன. 2025இல் 'ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருதுக்காக, தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே செவிலியர் அலமேலு மங்கையர்க்கரசி.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 12 ஆண்டுகளாக செவிலியராகப் பணியாற்றி வரும் அவர் கூறியது:
'ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள சேத்தூர்தான் எனது சொந்த ஊர். அப்பா விவசாயி. அம்மா மாற்றுத்திறனாளி. வீட்டைக் கவனித்துக் கொள்கிறார்.
சேத்தூர் பள்ளியில் நான் பத்தாம் வகுப்பு முடித்ததும், மேல்நிலைக் கல்வியை முகவூர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். இதற்காக, அந்தப் பள்ளிக்கு நாள்தோறும் 3 கி.மீ. நடந்து செல்வேன். மதுரை மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பயிற்சியை முடித்து, கோவை தனியார் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன்.
2008இல் அரசு செவிலியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் அருகேயுள்ள அரட்டவாடி சுகாதார மையத்தில் பணிபுரிந்தேன். சுகாதார மையம் மதியம் வரை மட்டுமே செயல்படும். அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மருத்துவ
மனைகளுக்கு வருவதில்லை. வீட்டிலேயே பிரசவங்களைப் பார்த்துக் கொள்வார்கள். மலைவாழ் மக்களுக்கு உதவ சுகாதார மையத்தை 24 மணி நேரமும் செயல்பட வைத்தோம். நான் 12 மணி நேரம் சுகாதார மையத்திலும், என் சக செவிலியர் 12 மணி நேரம் சுகாதார மையத்திலும் இருந்தோம். இருட்டாக இருந்த சுகாதார மையத்தில் விளக்குகள் எரிய மலைவாழ் மக்களிடையே நம்பிக்கை பிறந்தது. பிரசவத்துக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் மக்கள் வரத் தொடங்கினர்.
2008இல் எனக்குத் திருமணமானது.
2009இல் விருதுநகர் மாவட்டத்தில் குன்னூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு மாற்றப்பட்டேன். அங்கு அறுவை சிகிச்சை மையம் புதிதாகத் தொடங்கப்பட்டது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பாமல் முடிந்தவரையில் மருத்துவரின் மேற்பார்வையில் தரமான சிகிச்சையை வழங்கியதால், மையத்துக்கு 'ஐ.எஸ்.ஓ.' தரச் சான்றிதழ் கிடைத்தது.
2010-இல் எனது முதல் மகள் பிறந்தாள். அந்த நேரத்தில் உதகைக்கு அருகிலுள்ள கோத்தகிரிக்கு நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். பச்சைக் குழந்தையை என் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு கோத்தகிரிக்குச் சென்றேன். அம்மாதான் என் இரண்டு மகள்களையும் வளர்த்தார்.
என் அப்பா, மகள்களைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவந்தார். நான் மக்களுக்குச் சேவை செய்ய, எனது பெற்றோர் எனக்கும் என் மகள்களுக்கும் சேவைகளைச் செய்தனர்.
ஒருமுறை கோத்தகிரியிலிருந்து 7 மணி நேரப் பயண தூரத்தில் கர்நாடக எல்லையில் இருக்கும் கிராமமான பந்தலூரில் குடும்பக் கட்டுப்பாடு முகாம் நடைபெற்றபோது, அங்கு செல்ல எந்த செவிலியரும் முன்வரவில்லை. இரண்டு வாரங்களுக்கு பந்தலூர் சென்று, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெண்களை 7 நாள்கள் முகாமில் வைத்து கவனித்துக் கொண்டேன். எனது பொறுப்புகளைச் சிறப்பாக முடித்து, மருத்துவத் துறை அலுவலர்களின் பாராட்டைப் பெற்றேன்.
2013இல் நான் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். பிரசவம், குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை வழங்குவதில் மாவட்ட அளவிலான சாதனைகளை மருத்துவர்கள், செவிலியர்கள் நிகழ்த்தினர்.
மருத்துவமனைக்கு வெளியிலும் எங்கள் சேவையை விரிவுபடுத்தினோம். சிறையின் கழிவறைகளைச் சுத்தம் செய்தோம். பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறைகளைச் சுகாதாரமாக வைத்துக் கொள்வதைக் கற்றுக் கொடுத்தோம். காய்கறிச் சந்தைக்குச் சென்று மக்கும், மக்காத குப்பைகளைப் பிரிப்பது; காசநோய், எய்ட்ஸ், சுற்றுச்சூழல் தூய்மைக்கு பொது மக்களின் பங்களிப்பு எப்படி அமைய வேண்டும், வீடுகளில் எரிவாயு அடுப்பு விபத்துகளை எப்படித் தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் என நடத்தினோம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் இதயம், மூளை அறுவைச் சிகிச்சை வசதிகள் அறிமுகமாயின. சிகிச்சை குறித்த அனுபவமும் எங்களுக்குக் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, மருத்துவமனை சார்பாக யூடியூப் சேனலை நான் நடத்தி வருகிறேன். இதில், பல காணொளிகளைப் பதிவேற்றியுள்ளேன்.
நோயாளிகள், ஜூனியர் செவிலியர்கள், பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த புரிதலை, விழிப்புணர்வை வழங்கி வருகிறேன். எனது மருத்துவ சேவைகளுக்காக, குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டாலும், சாதனைகள் என்னுடையது மட்டுமல்ல; அதில் மருத்துவர்களுக்கும் , சக செவிலியர்களுக்கும் பங்கு உண்டு.'' என்கிறார் அலமேலு மங்கையர்க்கரசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது